Saturday, January 31, 2009

மறைந்த பின்னும் வாழும் நாகேஷ்!

நடிகர் நாகேஷ், நம்மைவிட்டு பிரிந்து வேறொரு உலகத்திற்கு போனதாக திரு ராஜ நடராசன் பதிவிலிருந்து அறிந்தேன் :(

http://parvaiyil.blogspot.com/2009/01/blog-post_31.html

--------------------------------------------------------

நாகேஷ் பற்றி கொஞ்சம் எழுதலாம்னு தோன்றியது. அதனால் விளைந்தது இந்தப்பதிவு!

நாகேஷ், நம்மைவிட்டு பிரியும்போது இவருக்கு வயது 77. இந்த நகைச்சுவை மன்னன் மறைந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறார்.

இவர் செய்த நகைச்சுவையில் என்னை மிகவும் கவர்ந்தவை!

* திருவிளையாடல் "தருமி"

* காதலிக்க நேரமில்லை "செல்லப்பா"

* ஆயிரத்தில் ஒருவன் "அழகன்"


இவர் படங்களில், சமீபத்தில் டி வி டி இல் பார்த்த படங்களில் நான் ரசித்த சிலவற்றை சொல்கிறேன்.

* வசந்த மாளிகையில் இவர் பேசுற ஒரு வசனம், "பெரிய துரை" பாலாஜியிடம் சொல்லுவார்,

"ஒத்துக்கிறேன், ஊர் குடியை எல்லாம் கெடுத்தது நான் தான். ஆனா, நீ என் குடியையே கெடுக்கப் பார்க்கிறயே? "

ஊரையெல்லாம் கெடுத்தாலும் தான் மட்டும் நல்லா வாழனும்னு நெனைக்கிற "கீழ்வர்க்கம்" தான் மனிதன் என்பவன் என்ற உண்மைதான் எனக்கு ஞாபகம் வரும்!

* எதிர் நீச்சலில், "மாது" பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒண்ணு. மனிதன் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பவன் அல்ல! சிலர் உணர்வுகளை மதிக்காத முட்டாளகத்தான் வாழ்கிறான் என்பதை "மாது" என்கிற நாகேஷ் பாத்திரம் மூலம் பாலசந்தர் அழகா சொல்லி இருப்பார்.

* "தில்லானா மோகனம்பாள்" படத்திலே "வைத்தி" என்கிற மட்டமான "ப்ரோக்கரா" வந்து கிளப்புவார் நாகேஷ். வைத்தி இல்லைனா அந்த படத்தில் பல திருப்பங்களை எ பி நாகராஜன் கொண்டு வந்திருக்க முடியாது. வில்லன் இல்லாத அந்தப்படத்தில் எல்லோரும் வெறுக்கும் ஒரே பாத்திரம் இச்த "வைத்தி" தான்.

* அதே போல் கெளரவத்தில், "கண்ணன்" (சின்ன சிவாஜி) னை தூண்டிவிட்டு "பாரிஸ்டர் ரஜினிகாந்து"க்கு (பெரிய சிவாஜி)எதிராக இயங்க வைப்பதுபோல் ஒரு மட்டமான வக்கீலாக நடித்து இருப்பார், நாகேஷ்.

* தில்லுமுல்லுப் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேஷத்திற்கு உதவி செய்வதுபோல் உண்மையான நடிகர் நாகேஷாகவே கேசுவலாக வந்து நடித்து இருப்பார். ரஜினியின் இரட்டை வேட நாடகத்தையும், நாகேஷின் சினிமாவில் அவர் நடிக்கும் இரட்டை வேடத்தையும் அழகாக இணைத்து இருப்பார் இயக்குனர் கே பாலசந்தர்.

* அபூர்வ சகோதரர்களில் வில்லன்னாகவும் நடித்து ஜொளித்தவர் நாகேஷ்.

இவர் மறைந்தாலும் நம்மைவிட்டு பிரியப்போவதில்லை. நம் நினைவில் மற்றும் இவர் நடித்த படங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், இருப்பார்!

இவர் குடுப்பத்தினருக்கு என்னுடைய வருத்தங்கள்! :(

Friday, January 30, 2009

எம் ஜி ஆர் vs ரஜினி (2)

* எம் ஜி ஆர், சினிமாவில் கத்தி சண்டை, சிலம்பம் எல்லாம் நல்லாவே போடுவாரு. ஹைதர் காலத்து எம் ஜி ஆர் ரசிகர்களெல்லாம் இதை சொல்லுவார்கள். சினிமாவில்தான் இருந்தாலும் இதற்கும் நல்ல பரிச்சயம், திறமை வேணும். ரஜினிக்கு இதுபோல் சண்டைகளில் பரிச்சயம் இல்லை. அடுத்த வாரிசுவில் இவர் செய்யும் வாள் சண்டை அவ்வளவு சிறப்பாக இருக்காது .

* எம் ஜி ஆர், உடல் ஊனமுற்றவராக நடித்ததாக எனக்கு எந்தப்படமும் தெரியாது. அடிமைப்பெண்னில் வருகிற வேங்கையன் முதலில் கூனாக வந்தாலும் பிறகு நிமிர்ந்து நல்லாகிவிடுவார். ரஜினி முள்ளும் மலரும் படத்தில் ஒரு கை இழந்தவராக நடித்து இருக்கிறார்.

* எம் ஜி ஆர் காமெடி படமோ, அல்லது காமெடி ரோல் போல நடித்ததில்லை. அவருக்கு காமெடியெல்லாம் வருமா என்னனு தெரியலை. ரிஷபன் சொன்னது போல் ரஜினிக்கு காமெடி மிகப்பெரிய பலம். அவர் நடித்த தில்லு முல்லு முழு நீள காமெடிப்படம். மேலும் காமெடியன்கள், கவுண்டமணி, விசு, செந்தில், வடிவேலு, விவேக் (மன்னன், வீரா, சந்திரமுகி, சிவாஜி) போன்றவர்களுடன் இணைந்து காமெடி செய்துள்ளார்.

* எம் ஜி ஆர் படங்களில் இரண்டாவது ஹீரோ என்பது ரொம்ப கஷ்டம். ஜெமினி, எஸ் எஸ் ஆர், முத்துராமன் போன்றவர்கள் சிவாஜியுடன் நிறையப்படங்களில் இணைந்து நடித்தூள்ளார்கள் அவர்களுக்கு தனியாக டூயட்களும் வரும். ஆனால் எம் ஜி ஆர் படங்களில் அது போல் அவர் யாருக்கும் நல்ல ரோல் கொடுக்கப்பட்டதாக தெரியவில்ல! ஜெமினி, முத்து ராமன், மற்றும் சிவாஜி (கூண்டுக்கிளி) போன்றவர்கள் எம் ஜி ஆருடன் இணணந்து நடித்த படங்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டும்தான். பொன்மனச்செம்மல் தான். ஆனால் இன்னொருவருக்கு நல்ல ரோல் கொடுக்கும் அளவுக்கு பெரிய மனது அல்லது தன் நடிப்பில் நம்பிக்கை இவருக்கு இருந்ததாக தெரியவில்லை. ஆனால் ரஜினியுடன் அவர் சூப்பர் ஸ்டார் ஆன பிறகும் பிரபு (குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன்), சத்யராஜ் (மிஸ்டர் பாரத்), மற்றும் சிவாஜி (படையப்பா, படிக்காதவன்) போன்றவர்களுக்கு நல்ல ரோல் கொடுத்து நடித்துள்ளார். இன்னொருவர் தன் புகழை அடித்துப்போய்விடுவார் என்று ரஜினி அதிகம் பயப்படுவது இல்லை. அவர் நடிப்பின்மேல் அவருக்கு நம்பிக்கை ஜாஸ்தியோ என்னவோ.

* எம் ஜி ஆர் இயக்கிய படங்கள் இரண்டு. அது இரண்டையும் தயாரித்ததும் அவரே. அவைகள், நாடோடி மன்னன் (1958)மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் (1973) . இரண்டும் மாபெரும் வெற்றிப்படங்கள். இந்த இரண்டு படங்கள் வந்த வருடத்தில் எம் ஜி ஆர் வெளியிட்ட படங்கள் ஒன்று (1958) அல்லது இரண்டு (பட்டிக்காட்டு பொன்னையா 1973- இது ஒரு தோல்விப்படம்) மட்டுமே. ரஜினி ஒரு இயக்குனராக எந்தப்படத்தையும் இயக்கியதில்லை!

* கெளரவ வேடத்தில் நடிப்பதை அகெளவரவமாக நினைப்பவர் எம் ஜி ஆர் என்று நினைக்கிறேன். இவர் கெளரவ வேடங்களில் நடித்து எந்தப்படமும் நான் பார்த்ததில்லை. ரஜினி , அன்புள்ள ரஜினிகாந்த், மற்றும் பல படங்களில் கெளரவ வேடங்களில் நடித்து உள்ளார்.

* எம் ஜி ஆர் க்கு இசையமைப்பாளர்கள் யாரும் பின்னனி பாடல்கள் பாடியதாக எனக்கு தெரிய இல்லை. ரஜினிக்கு எம் எஸ் விஸ்வநாதன் (சம்போ ஷிவ சம்போ, நினைத்தாலே இனிக்கும்), இளளயராஜா (உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி, பணக்காரன்), மற்றும் எ ஆர் ரகுமான் (அதிரடிக்காரன், சிவாஜி) போன்றவர்கள் பின்னனி பாடியுள்ளார்கள்.

* எம் ஜி ஆர் கடைசிவரை, இளைஞனாகவேதான் நடித்தார். ரெண்டு ரோலில் அப்பா இறந்து போவதுபோல் வரலாம் (அடிமைப்பெண்). ஆனால் வயது வந்த பெண்ணுக்கு, பையனுக்கு தந்தை என்பது போலெல்லாம் வயதான தந்தையாக அல்லது கிழவனாக நடித்ததாக தெரியவில்லை (ஒரு சில பாடல்களில் அந்த் கெட்-அப்ல வருவதுண்டு). ரஜினி, 6-60 வரை, எங்கேயோ கேட்ட குரல், நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை, படையப்பா போன்ற படங்களில் வயது வந்த பெண் குழந்தைக்கு தந்தையாகவும் நடித்தும் உள்ளார்.

குறிப்பு: நான் நிறைய "டேட்டா" தவறுதலாக கொடுத்து இருக்கலாம். எம் ஜி ஆர் பழைய படங்கள் (40, 50, 60 ல் வந்த படங்கள்) நான் பல பார்த்ததில்லை . தவறுதலாக சொன்ன விசயங்கள் எதுவும் இருந்தால் தயவு செய்து பின்னூட்டங்களில் சொல்லவும்.

Thursday, January 29, 2009

காதலுடன் 8

எதிர்பாராதவிதமாக சந்தியாவை பார்த்தவுடன், "ஹாய் சந்தியா" என்றார் ராஜு சற்றே சமாளித்து.

"இவங்கதான் உங்க..?" என்றாள் சந்தியா ராஜுவின் மனைவியைப்பார்த்து.

"ஷி இஸ் மை வைஃப் சாந்தி!"

"ஹலோ சாந்தி! நான் சந்தியா! உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி" என்றாள் சந்தியா புன்னகையுடன்.

அதன்பிறகு வேற என்ன பேசுவதென்று தெரியாமல் முழித்தார், ராஜு.

"சரி நீங்க நிதானமாக ஷாப்பிங் பண்ணுங்க. நான் அவசரமா ஒரு ஐட்டம் மட்டும் வாங்க வந்தேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சாந்தி! பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சந்தியா.

அவள் "செல்ஃப் செக் அவுட்" டில் செக் அவுட் பண்ணிவிட்டு, காரில் ஏறி வேகமாக புறப்பட்டாள். ராஜுவையும் அவர் மனைவியையும் பார்த்ததிலிருந்து அவளுக்கு ஒரு மாதிரியான கில்ட்டி ஃபீலிங்கா இருந்தது. ராஜுவின் மனைவி சாந்தி ராஜுவுக்கு சரியான ஜோடியாக என்று தோன்றியது அவளுக்கு. ராஜூவுடன் உறவை முறித்தபிறகு அவளுடைய அம்மா அப்பாவிற்கெல்லாம் இவள் விதண்டாவாதம் பண்ணுவதாகத்தான் தோன்றியது. அவங்களுக்கு இவள் பேசுவதெல்லாம் விந்தையாக இருந்தது. இவள் என்னதான் எதிர்பார்க்கிறாள்? ஏன் இப்படி இருக்கிறாள்? என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள். இவள் உணர்வுகளோ, எதிர்பார்ப்போ எதுவுமே புரியவில்லை. அப்பா அம்மாவிடம் வாரம் ஒருமுறை கால் பண்ணி பேசுவாள் சந்தியா. அவர்கள் இவள் கல்யாணம் எப்போ செய்யப்போறா என்று மறுபடியும் கவலையுடன் ஆரம்பிப்பார்கள். அதைப்பற்றி பேச ஆரம்பித்தாலே சீக்கிரம் கட் பண்ணிவிடுவாள்.

தன் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிவிட்டால் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சந்தியாவின் அப்பா அம்மா. சந்தியாவைப் பொறுத்தவரையில் அது உண்மை இல்லை. கல்யாணம் வெறும் ஆரம்பம்தான். முடிவு இல்லை! அவளுக்கு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இளம் இந்தியர்களைப் பற்றி நல்லாவே தெரியும். இந்த அரைவேக்காடுகளுக்கு என்ன வேணும்னே புரியவில்லை அவளுக்கு.

போன வாரம் அவள் ஃபார்மர் க்ளாஸ்மேட் ராம் கூப்பிட்டான். அவன் இந்தியா போறானாம். அவனுக்கு இந்தியாவில் அரேஞ்சிட் மேரேஜ் நடக்கப்போகுதாம். இவளுக்குத் தெரிய கரோலைன் என்கிற அமெரிக்கன் கேர்ள், அவர்கள் க்ளாச்மேட் ஒருத்தியோடு அவன் நேற்றுவரை சுத்திக்கொண்டு இருந்தான். கரோலைன் ரொம்ப நல்ல பொண்ணு, வெகுளி. இவனுக்காக இந்தியன் குக்கிங் எல்லாம் கரோலைன் கற்றுக்கொண்டாள். ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தார்கள், ஒரே படுக்கையில் படுத்து எழுந்தார்கள். இப்போ அவளை கழட்டி விட்டு விட்டு அரேஞ்சிட் மேரேஜ் பண்ணுறானாம்.

அப்போ அவளோட ஏன் சுத்தினனு கேட்டால், "ஜஸ்ட் ஃபார் செக்ஸ்" என்று கேவலமா ஒரு பதில் சொல்லுகிறான், ராம். அவனிடம் சந்தியா ஒண்ணும் சொல்லவில்லை! ஆனால் She really got mad. "What a dirty bastard he is!" என்று மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். அவன் கல்யாணத்திற்கு மட்டுமல்ல, செத்தால்கூட அங்கே போவதில்லை என்று முடிவு செய்துவிட்டாள் சந்தியா. இதுபோல் எந்தவித மாரல்ஸோ, கட்டுப்பாடோ இல்லாமல் மிருகம் மாதிரி வாழ்ந்துகொண்டிருக்கிறது இன்றைய படித்த இந்திய இளைஞர் சமுதாயம் என்பது அவளுக்கு நல்லாவே தெரியும்.

அவளுக்கு ரமேஷ் நினைவு வந்தது. ரமேஷிடம் குறைகள் இல்லையென்று சொல்லமுடியாது. ஆனால் இவளை அட் லீஸ்ட் புரிந்துகொண்டார். எத்த்னைபேர் நம் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்கிறார்கள்? ரமேஷ் பற்றி யோசிக்கும்போது லக்ஷ்மி நினைவு வந்தது. அதற்குள் வீடும் வந்ததும், காரை பார்க் பண்ணிவிட்டு அப்பார்ட்மெண்ட் உள்ளே வந்தாள். ரமேஷ் கொண்டு வந்திருந்த கிஃப்ட்டை எடுத்து "கிஃப்ட் ராப்" பை பிரித்தாள். அதில் ஒரு டி வி டி இருந்தது, அதனுடன் ஒரு சின்ன கார்டும் இருந்தது.

அது ஒரு ஹோம்-மேட் டி வி டி. அதனுள் ஒரு நோட் இருந்தது.

அதில், "ஏய்! இது ஒரு மாதிரியான டி வி டி. ஒரு மாதிரியான படம் பிடிக்கும்னா பாரு. அப்புறம் பார்த்துவிட்டு என்னைத் திட்டாதே!" என்று எழுதி இருந்தான் ரமேஷ்!

என்ன கொழுப்பு இவருக்கு என்று சிரித்துக்கொண்டாள். அவள் க்யூரியாசிட்டி அவளை கொன்றது. இருந்தாலும் அதை பார்க்க தைரியம் இல்லை. அதை தனியாக வைத்துவிட்டு, அதோட இருந்த கார்டை பிரித்துப்பார்த்தாள்.

சந்தியா!
உன்னை தோழியாக அடைந்த பாக்கியசாலி நான்!
-ரமேஷ்

உடனே ரமேஷை செல் ஃபோன்ல கூப்பிட்டாள்.

"ஹாய் சந்தியா!" என்றான்.

"என்ன உங்க கலீக்குடன் டிஸ்கஷன் முடிந்ததா, ரமேஷ்?"

"ஒரு வழியா முடிந்தது"

"ஏன் ஒரே அடியா சலிச்சுக்கிறீங்க.பாவம்?'

"நல்லவேளை நீ என் கோ-வொர்க்கரா இல்லை"

"ஏன்?"

"கோ-வொர்க்கர்னா... சரி விடு! என்ன விசயம், சந்தியா?"

"உங்க கார்ட் மற்றும் அதில் உள்ள காமெண்ட் நல்லா "க்யூட்டா" இருந்துச்சு!, தேங்க்ஸ்"

"அப்புறம்?"

"ராஜுவையும் அவர் மனைவி சாந்தியையும் டார்கெட்ல பார்த்தேன். ஹலோ சொல்லிவிட்டு வந்துட்டேன்"

"எங்கிருந்தாலும் வாழ்க நு வாழ்த்திட்டயா?"

"ஆமா"

"அப்புறம்?"

"அப்புறம் ஒண்ணுமில்லை.. ஆமா அதென்ன "ஒரு மாதிரி"னா?

"ஹா ஹா ஹா" அவன் சத்தமாக சிரித்தான்.

"என்னை கொலைகாரியாக்கிடாதீங்க ரமேஷ்!"

"உன் கைகளில் சாக கொடுத்து வச்சிருக்கனும், சந்தியா!"

"உங்களுக்கு பயங்கர கொழுப்பு தெரியுமா?"

"நீ என்ன சின்னப்பொண்ணா? அடல்ட் தானே?"

"இல்லை டீனேஜர்"

-தொடரும்

Saturday, January 24, 2009

தெய்வம் நின்று கேட்குமா? (2)

நான் நண்பன் மணியுடன் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது எதிரில் அண்ணன் சாமிநாதன் வந்தார். சாமிநாதன் அண்ணன் அப்பாவுடைய நண்பர். அந்தக்காலத்தில் அப்பா அவருக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அப்பாவின் உதவியில் கரஸ்ப்பாண்டென்ஸ்ல படித்து எம் ஏ முடித்தாராம். அப்பாவின் உதவியில் சர்வீஸ் கமிஷன் எழுதி பாஸ் பண்ணினாராம். இப்போ பி டபிள்யூ டி ல ஹெட்க்ளார்க்கா இருக்கார் அண்ணன் சாமிநாதன். ஆனா அண்ணன் இன்னும் நன்றியோட இருப்பார். இன்னைக்கும் என்னிடம் பேசும்போது அப்பாவுடைய நல்ல மனசால்தான் “நீங்க படிச்சு நல்லா இருக்கீங்க தம்பி” னு அடிக்கடி சொல்லுவார்.

“வாங்க ரவி! என்ன வாக்கிங்கா? அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கீங்க. ஆளு கொஞ்சம் நிறமா, நல்லா கொஞ்சம் பூசினாற்போல இருக்கீங்க, தம்பி!” என்றார் அன்புடன்.

“வாங்க சாமிநாதன் அண்ணே! நல்லா இருக்கீங்களா?”

“இருக்கேன் தம்பி! ஆமா தம்பி அங்கே நீங்க இருக்கிற வேலை பார்க்கிற இடத்தில் இந்த "நீக்ரோ"க்கள் எல்லாம் இருப்பாங்களா? அவங்க ரொம்ப க்ரைம்லாம் பண்ணுவாங்க, துப்பாக்கியோட திரியுவாங்க, ரொம்ப மோசம் அது இதுனு னு சொல்றாங்களே தம்பி?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் பயமில்லை அண்ணன். என் நண்பர்களே அவர்களில் இருக்காங்க! ஒரு சிலர்தான் மோசம். ரொம்ப நல்லவர்களும் இருக்காங்க அண்ணே! அப்புறம் அண்ணே! அவர்களை "நீக்ரோ"னு சொல்லக்கூடாது! அது அவர்களை அவமானப்படுத்துவது போல!” என்றேன் புன்னகையுடன்.

“என்ன தம்பி! அவங்கல்லாம் ஆஃப்ரிக்காவில் இருந்து வெள்ளைக்காரன் கொண்டு வந்து வெள்ளைக்காரன் ட்ட அடிமையா இருந்தவர்கள்தானே தம்பி? வேற எப்படி சொல்வது தம்பி அவர்களை?”

“கறுப்பர்கள்னு சொல்லலாம் அண்ணே! இல்லைனா ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் நு சொல்லுவாங்க! நீக்ரோனு சொன்னால் அது அமெரிக்காவில் தவறு”

“என்ன தம்பி சொல்றீங்க நீங்க? கறுப்பர் நு சொன்னாத்தான் அவர்களை அவமானப்படுத்துவது போல இருக்கு தம்பி” என்றார் அண்ணன்.

“உண்மைதான் அண்ணன்! சரி விடுங்கண்ணே. நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டில் எல்லோரும் நலமா?”

“நான் அந்த ஆண்டவன் புண்ணியத்தில் நல்லா இருக்கேன் தம்பி. நீங்க என்ன யாரையும் வெள்ளைக்காரிய கல்யாணம் பண்ணிட்டு வந்திடாதீங்க. தம்பி! அப்பாவிடம் நான் அடிக்கடி உங்களைப்பத்தி விசாரிப்பேன், தம்பி” .

“ஏன் வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணினால் என்ன பெரிய தப்பு, அண்ணே? அவங்கள்லயும் நிறைய நல்லவர்களும் இருக்காங்க அண்ணே!” என்றேன் சிரித்துக்கொண்டே.

“என்ன தம்பி இப்படி வம்பு பேசுறீங்களே? அண்ணன் வயசில் மூத்தவன் சொல்றேன் கேளுங்க தம்பி! அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது தம்பி. நல்ல தமிழ்பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோங்க தம்பி. அப்போத்தான் அழகா லட்சணமா இருக்கும். அப்பா அம்மா ஊரில் தலைநிமிர்ந்து நடக்க முடியும் இல்லையா தம்பி?”

“உண்மைதான் அண்ணே! சரி வீட்டுக்கு வாங்க அண்ணே!”

“சரி தம்பி அப்பாவை நான் கேட்டதா சொல்லுங்க! அப்பாதான் எனக்கு அந்தக்காலத்தில் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தவர். நீங்க அமெரிக்கா போனால் என்ன? எவ்வளவு படிச்சா என்ன தம்பி? அப்பா அறிவில் உங்களுக்கு பாதிகூட இருக்குமானு தெரியலை. உங்க அப்பாதான் பெரிய அறிவாளி, தம்பி! அவரால்தான் அண்ணன் இன்னைக்கு இந்த நிலையில் இருக்கேன் தம்பி! சரி தம்பி பார்க்கலாம்” என்று அப்பாவை இன்னொருமுறை புகழ்ந்துவிட்டு நடந்தார்.

பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலுள்ள ஒரு பேக்கரில உள்ளே போய், இரண்டு காஃபி ஆர்டர்பண்ணி நானும் நண்பன் மணியும் அமர்ந்தோம். இதுபோல் பேக்கரிக்குள் முன்பெல்லாம் ஆண்கள் மட்டும்தான் வந்து அமர்வார்கள். ஆனால் இன்று கேர்ல்ஸ் எல்லாம் செட்டாக வந்து காபி குடித்துவிட்டு அரட்டை அடித்துவிட்டு போவதுபோல் இருந்தது. ஊர் நிறையவே முன்னேறி இருப்பது தெரிந்தது.

“சரிடா மணி, நம்ம சாமிநாதன் அண்ணனோட அண்ணன் மகன் முருகதாஸ் எங்கடா? பாம்பே ல இருக்கிறானா?

“அந்த ரஜினி ஸ்டுடியோ முருகதாஸா?”

“ஆமடா, அவன் கடையில் உட்கார்ந்துதான் ஊர்க்கதையெல்லாம் பேசுவோம் இல்லையா? இப்போ எங்கே இருக்கான்?”

“அவன் திடீர்னு எதோ காய்ச்சல்ல படுத்தான். திடீர்னு உலகத்தைவிட்டே போய் சேர்ந்துட்டான். டாக்டர் என்ன வியாதி என்னனு தெளிவா சொல்லல. உடம்புல எதிர்ப்பு சக்தியே இல்லையாம்டா. என்ன காய்ச்சல்னு தெரியலை”

“என்னடா சொல்ற?!'

“அவன் ஆடாத ஆட்டமா? ஸ்டுடியோவிலே எத்தனை கிராமத்து பெண்களை கரெக்ட்பண்ணி இருக்கான் தெரியுமா? இங்கே ஸ்டுடியோவிலிருந்து விலகி பாம்பேல போய் ஏதோ கப்பல்ல எல்லாம் கொஞ்ச நாள் வேலை பார்த்தாண்டா. அப்புறம் ஒரு 5 வருசத்திலே ஊருக்கு திரும்பி வந்தான். கண்டவளோட படுத்து எந்திரிக்கிற டைப் இல்லையா? பாம்பேல போய் யார்ட்ட படுத்தானோ, என்னவோ போ!”

“எதுவும் எயிட்ஸ் கியிட்ஸ் வந்துருச்சா என்னடா மணி?”

“அதெல்லாம் இல்லைடா! எல்லாருக்கும் வர்ற காய்ச்சல்தான் இவனுக்கும் வந்தது. கேன்சர்மாதிரி எதுவும் பெரிய வியாதி யெல்லாம் இல்லடா, ரவி”

“என்னவோ போ! ஊரில் நமக்கு தெரிந்தவர்களே நிறையப்பேர் போய் சேர்ந்துட்டானுக போல!"

Friday, January 23, 2009

கண்ணதாசனுக்கு “கடவுள்" செய்த உதவி!

கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகள் ஒரு தனி ரகம்தான். காதலாக இருக்கட்டும் தத்துவமாக இருக்கட்டும், அவருக்கு இணை அவர்தான். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு பல குறைகள் உண்டு. ஒரு பெரிய குடிகாரர், அவருக்கு பல மனைவிகள்.

கண்ணதாசன், நாத்தீகராக இருந்து ஆத்திகப்பாதையில் வந்தவர். நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பில் பிறந்த இவர் அர்த்தமுள்ள இந்துமதம் என்கிற புத்தகமும் எழுதியுள்ளார்.

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா? கடவுள் நம்பிக்கை செய்யும் தொழிலுக்கு உதவுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். தன்னம்பிக்கை, நேர்மை, உழைப்பு இருந்தால் போதும் என்றுதான் சொல்லுவேன். கடவுள்நம்பிக்கை கோயில் பூசாரிக்கு உதவும். ஏன்னா கடவுள் இல்லைனு ஆயிடுத்துனா அவருக்கு அந்த தொழில் செய்யமுடியாது. ஆனால், கண்ணதாசனுக்கு அவருடைய கடவுள்நம்பிக்கை நிச்சயம் பலவகையில் உதவியது என்றுதான் சொல்வேன். அவர் எழுதிய கவிதைகளில் உணர்ச்சிப்பூர்வமான வரிகள் அனைத்திலும் கடவுளை சாடுவார், புகழ்வார், குற்றம் சொவார் கவியரசர் கண்ணதாசன். ஒருவேளை அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அந்த வரிகளை அவரால் உருவாக்கி இருக்க முடியாது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.

கடவுள் பற்றி அவர் எழுதிய கவிதைகளில் உள்ள சில வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!

ஃ பெண்ணைப்படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!

ஃ கடவுளை தண்டிக்க என்ன வழி?

ஃ ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ?

ஃ அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே! அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே.

ஃ ஆண்டவன் படச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்.

ஃ படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே!

ஃ உன்னைச் சொல்லி குற்றமில்லை! என்னைச்சொல்லிகுற்றமில்லை! காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி!

ஃ இரண்டு மனம் வேண்டும்! இறைவனிடம் கேட்டேன்!


ஒரு நாத்தீகரால் இதுபோல் வரிகள் எழுதமுடியாது. அதனால், கடவுள் இருக்காரோ இல்லையோ, கண்ணதாசனுடைய கடவுள் நம்பிக்கை இங்கு அவர் “தொழிலுக்கு” உதவி உள்ளது என்கிறேன்.

டி வி ஆர் அவர்களின் இந்தப்பதிவையும் பார்க்கவும்:
http://tvrk.blogspot.com/2009/01/blog-post_24.html

Thursday, January 22, 2009

இயக்குனர் பாலாவின் “மிருகவெறி”!

உலகத்தில் பலதரப்பட்ட மனிதர்கள் உண்டு! என்ன நம்ம தமிழர்களிலேயே உண்டு. மனித தெய்வங்களையும், அப்பாவிகளையும் பார்க்கலாம். மிருகங்களையும் பார்க்கலாம்! இதில் திராவிடர்களும் அடங்குவார்கள்! பார்ப்பனர்களும் அடங்குவார்கள்! கொலைசெய்யப்பட்ட சங்கர் ராமன் பார்ப்பனர்தான். கொலைகுற்றம் சாட்டப்பட்டவரும் பார்ப்பனர்தான்.

சினிமா என்பதை பொழுதுபோக்காக எடுத்துக் கொள்வது ஒன்றும் தவறில்லை. பொழுதுபோக்குக்காக சினிமா பார்ப்பதெல்லாம் ஏதோ கொலைக்குற்றம் போல பலர் பேசுவதுண்டு. ஆனால் சினிமானு வந்துவிட்டாலே பலதரப்பட்ட விவாதங்கள், மற்றும் குழப்பம்தான். இந்த நடிகர்கள் அரசியல் கருத்தை சொல்ல ஆரம்பித்ததும், உல்கத்தில் எங்கும் இல்லா ஒரு குழப்பமான நிலைமை நம் தமிழர்களுக்கு.

தமிழ் சினிமாவை யாரும் சாதாரண ஒரு "பிக்ஷனாக" எடுத்துக்கொள்வதில்லை. அதுவும் நம்ம ரசிகப்பெருமக்கள் இருக்காங்களே! அவங்களுக்கு பிடித்த நடிகர் என்ன பண்ணினாலும் அது அவங்களுக்கு நல்லாத்தான் தெரியும்! ஒரு சில விமர்சகர்கள் மனசாட்சியே இல்லாமல் ஒருதலை பட்சமாக எந்தவித கூச்சமும் இல்லாமல் விமர்சிப்பதையும் பார்க்கலாம்!

சரி தலைப்புக்கு வருவோம். பாலானு ஒரு இளம் இயக்குனர் வந்து இருக்காரு இல்லையா? ஒரு 10 வருசமாக தமிழ் சினிமா உலகில் இருக்கும் இவர் இதுவரை இயக்கி வெளிவந்துள்ள படங்கள் மூணு படம்தான். நாலாவது நான் கடவுள் என்கிற படம்! வெளிவரப்போகிறது. இதில் முதலில் விக்ரம் நடிப்பதாக இருந்தது, பிறகு அஜீத், பிறகு ஆர்யா நடிக்கிறார். இதிலிருந்து அஜீத் வெளியானது பெரிய அதிர்ச்சியை விளைவித்தது. அஜீத் ரசிகர்களுக்கு மன்க்கசப்பு வேறு.

அந்தக்காலத்துல இருந்த ராமநாரயணன், எஸ் பி முத்துராமன் இயக்குனர்கள் போல 2 மாதத்திற்கு ஒரு படம் என்று வெளியிடுவதெல்லாம் மலையேறிப்போச்சு. இப்போ எல்லாம் நம்ம ஆளுங்க ஹாலிவுட் லெவெலுக்கு ஆகிவிட்டார்கள். அதுவும் நம் தமிழ் இயக்குனர்கள். அதாவது 2 வருடத்திற்கு ஒரு படம்தான் இவர்கள் படைப்பில் வெளி வருது. நடிகர்களும் அப்படித்தான், ரஜினி முதலில் படங்களை குறைத்தார். பிறகு கமலும் ரொம்ப குறைத்துவிட்டார். இப்போ இளம் நடிகர்கள் கூட அப்படித்தான் நடிக்கிறாங்க. அந்தக்காலத்து சிவாஜி எம் ஜி ஆர் போலவோ இல்லை கமல் ரஜினி போலவோ இவர்கள் இன்று இல்லை! அதுவும் விக்ரம்லாம் வருசத்துக்கு ஒரு படம்கூட இப்போ வெளியிடுவது இல்லை! இது நம்மில் பெரிய முன்னேற்றம் தான். விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் மற்றும் சிம்புகூட படங்களை குறைத்துவிட்டார்கள்!


தேனி-போடி பக்கத்திலிருந்து வந்தவர் நம்ம இயக்குனர் பாலா. முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்தவர் இவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியமோ இல்லை பொருளாதாரமோ தடவி தடவிப்படித்தவர். ஆனால் இவருக்குள் ஒரு பெரிய திறமை இருந்ததை யாரும் அன்று உணரவில்லை. பாலு மகேந்திராவிடம் கொஞ்சநாள் இணை இயக்குனராக பணியாற்றி இப்போ இவர் ஒரு சிறப்பான இயக்குனர் என்று பாராட்டப்பட்டு வருகிறார்.

இவர் படங்கள், சேது (விக்ரம் க்கு மறுவாழ்வு கொடுத்த படம்), நந்தா (சூர்யாவை ஒரு நல்ல நடிகனாக்கிய படம்) மற்றும் கடைசியாக வந்த பிதாமகன் (சூர்யா விக்ரம்) எல்லாமே க்ரிடிக்ஸ்களால் பாராட்டப்பட்டவை! இவர் படங்களை நம்ம விமர்சகர்கள் மிகவும் மதிப்பதுண்டு.

இவர் படங்களுக்கு பொதுவாக இசை அமைப்பது இளையராஜா தான். ஏனோதானோனு எடுக்காமல் நிறைய நேரம் செலவழித்து நல்ல படம் கொடுப்பவர் இவர்.

பொதுவாக பாலா படங்களில் எனக்கு ஒரு பெரிய பிரச்சினை (இது எல்லோருக்கும் பிடிக்கும்) என்னவெண்றால், வருகிற கதாநாயகன் ஒரு மாதிரி “சைக்கோ” வாக இருப்பான். அவனிடம் ஒரு பயங்கரமான மிருகத்தனம் இருக்கும்!

சேதுவில் பொறுப்பில்லாத விக்ரமிடம் உள்ள மிருகத்தனம். மேலும் அவன் அண்ணனிடம் அவன் நடக்கிறவிதம், பயங்கர எரிச்சலா இருக்கும்! காலேஜ்க்கு போறேன் னு ஊர் சுத்துகிற பொறுக்கிக்கு என்ன திமிர் வேண்டிக்கிடக்கு? இந்த மாதிரி காலேஜுக்குப்போறேன் னு ஊர் சுத்துகிற இளைஞர்கள் நம்ம பாழாப்போன கலாச்சாரத்தில்தான் உண்டு. எருமைமாடு மாதிரி வளர்ந்தவனையெல்லாம் "போய் சம்பாரிச்சு சாப்பிடு", "வெளியே போ"னு அனுப்பிவிடுவார்கள் வெள்ளைக்காரர்கள்! நம்ம ஊரில் மாதிரி இதுகளை வச்சு கொஞ்சுவது இல்லை!

அதேபோல் நந்தாவில் “சூர்யா” ஒரு சைக்கோ பாத்திரம்தான். அதுவும் சூர்யாவுக்கு ஒரு நீல நிறத்தில் விழிகளை மாற்றி ஒரு மனித மிருகம்போலவே காட்டுவார் பாலா. சேதுவில் விக்ரமிடம் உள்ள அந்த வெறியை இந்த சூர்யாவிடமும் பார்க்கலாம். பெத்த அம்மாவே அந்த “மிருகத்தை” கொல்வதுபோல காட்டி முடிப்பார்!

அதேபோலதான் பிதாமகன் விக்ரம் பாத்திரமும்!

இப்போ வரப்போகிற "நான் கடவுள்" ஸ்டில்ஸ் பார்த்தால், ஆர்யாவும் அதேபோல் ஒரு “மிருகம்”தான் என்று தோனுது!

அதிலென்ன தப்பு? தப்பெல்லாம் ஒண்ணும் இல்லை, இந்த மாதிரி “வெறிபிடித்த” பாத்திரங்களை உருவாக்கும் பாலாவிடம் ஒரு “மிருகவெறி” இருக்கோ என்கிற ஐயம் எனக்கு! இதைப்போல ஒரு "ஸ்டீரியோ டைப்பிங்" நாயகர்களை மட்டும்தான் இவரால் உருவாக்க முடியுமா? இதைத்தவிர வேற எந்த பாத்திரமும் இவரால் உருவாக்க முடியாதா?

Even in நிறைய Hollywood movies, கொலகாரனைக்கூட ஒரு நல்ல ஹீரோவாக எல்லோராலும் விரும்பத்தக்க ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கலாம். நீங்க சில பாப்புளர் ஆங்கிலப்படங்கள் பார்த்தீங்கன்னா, “Unforgiven” ல Clint Eastwood உடைய, William munny, பாத்திரம் மற்றும் The Godfather ல Micheal and Vito பாத்திரங்களில் கூட ஹீரோக்களிடம் அந்த மிருகவெறிய காட்டமாட்டார்கள்! அந்த ஹீரோக்கள் கொலைகாரகள்தான்!

There are some famous dialogs about killings in these movies,

* It is hell of a thing Killing a man! Take away all he has got and all he is ever going to have!- Clint Eastwood in Unforgiven

* What history has taught us is YOU CAN KILL ANYBODY!- Al Pacino in Godfather-2

ஆனால் பாலாவின் கதாநாயகர்கள் இதுபோல் மனதில் நிக்கும் ஹீரோக்களாக இல்லாமல் வெறும் “மனித மிருகங்களா”த்தான் எனக்கு தோனுது! அவர்கள் கெட்டவர்களாக இருந்தாலும் ஒரு விரும்பத்தக்க கதாநாயகர்களாக இருப்பதில்லை! நான் கடவுள் ஆர்யாவும் இதேபோல்தான் ஒரு மிருகவெறி பிடித்த பாத்திரமாக அமையும் என்று நான் நம்புகிறேன்!

Monday, January 19, 2009

எம் ஜி ஆர் vs ரஜினி (1)

எம் ஜி ஆர், ரஜினி இருவரும் தமிழ் திரையுலகில் தலை சிறந்த பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் கொடுத்தவர்கள். ஆனால் இவங்க ரெண்டு பேருக்கும் வேற்றுமைகள்தான் அதிகம். ரஜினி, எம் ஜி ஆர் போல் என்று சொல்வது எனக்கு அர்த்தமில்லாமல் தோன்றும்.

ஃ எம் ஜி ஆர் நல்ல வெள்ளை நிறம்! ரஜினி நல்ல கறுப்பு!

ஃ எம் ஜி ஆர் மேக்-அப் போடாமல் வெளியே வருவதில்லை! ரஜினி தன் வழுக்கைத்தலையை மறைக்க ரொம்ப மெனெக்கட்டுக்கொள்வதில்லை.

ஃ எம் ஜி ஆர் ஒரு இலங்கையில் பிறந்த மலையாளி! ரஜினி கர்நாடகாவில் பிறந்த மராத்திக்காரர்! இருவரையும் வாழவைத்தது தமிழ்நாட்டு மக்கள் ரசனை.

ஃ எம் ஜி ஆர் பேசியது சுத்தமான தமிழ். ரஜினியின் தமிழ் உச்சரிப்பு ரொம்ப சுமார்தான்.

ஃ எம் ஜி ஆர் நடிக்க வந்த முதல்ப்படம் சதிலீலாவதி (1936). அவர் 100 வது படம் ஒளி விளக்கு (1968). அதாவது 32 வருட சினிமா அனுபவத்திற்கு பிறகுதான் 100 வது படத்தை தொட்டார். எம் ஜி ஆர் மிகக்கவனமாக தமிழ்ப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர். ரஜினியின் முதல்ப்படம் அபூர்வ ராகங்கள் (1975)! கிடைத்த வில்லன் கதாநாயகன் கதாபாத்திரங்களை எடுத்து கவனக்குறைவாக நடித்தவர். இவரின் 100 வது படம் ஸ்ரி ராகவேந்திரா (1985). சுமார் 10 வருடங்களில் 100 வது படத்தில் நடித்தவர்.

ஃ எம் ஜி ஆர் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எதிலும் நடித்து, "என்ன ஒரு நடிப்பு!" என்கிற புகழ் அடைந்ததே இல்லை. இருந்தாலும் ரிக்ஷாக்காரன் படத்திற்கு சிறந்த நடிகர் என்கிற நேஷனல் அவார்ட் பெற்றவர். ரஜினி முள்ளும் மலரும், 16 வயதினிலே, 6 லிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் நடித்து தனக்கு நடிக்கவும் தெரியும் என்று எல்லோரையும் நடிப்பில் திருப்திப்படுத்தியவர்! ஆனால் இவரும், நடிகர் திலகம் சிவாஜியும் சிறந்த நடிகருக்கான நேஷனல் அவார்ட் வாங்கியதில்லை.

ஃ எம் ஜி ஆர் திரையில் புகைப்பிடிப்பதில்லை! குடிப்பதும் கிடையாது! ரொம்ப நல்லவராக, கதாநாயகன் இமேஜை எப்போதும் கவனமாக பார்த்து நடித்தவர். ரஜினி, புகைப்பிடித்தே பெரிய ஸ்டார் ஆனவர்! இவர் பாபாவிற்கு பிறகு திரு ராமதாஸின் க்ரிட்டிசிஸத்தை “மதித்து” புகைபிடிப்பதை நிறுத்தியவர். இவர் குடித்து பாடும் பாடல்களில் எப்போதுமே ஜொளிப்பவர் (உதாரணம்: முள்ளும் மலரும், தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, படையப்பா). வில்லனாக நடிக்க ஆரம்பித்து கதாநாயகனாக ஆனவர்.

ஃ எம் ஜி ஆர் “தாயில்லாமல் நானில்லை” என்கிற புலமைப்பித்தன் எழுதிய பாடலில் (அடிமைப்பெண், 1969) நடித்து தாய் உள்ளங்களை கவர்ந்தவர். ரஜினி “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்கிற வாலி பாடலில் (மன்னன், 1992) நடித்து தாய்க்குலங்களை கவர்ந்தவர்.

ஃ எம் ஜி ஆர் க்கு 3 மனைவிகள்-ஒரே நேரத்தில் இல்லை! ஒரு குழந்தை பிறந்து இறந்ததாக சொல்கிறார்கள். ஆனால் அவருக்கு பிறந்த வாரிசு யாரும் உயிருடன் இல்லை. இது இவருக்கு மிகப்பெரிய பலமானது என்பதுகூட உண்மை. ரஜினிக்கு ஒரே மனைவி! எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா என்கிற பிராமணப்பெண்ணை காதல் திருமணம் செய்தவர். இவருக்கு இரண்டு மகள்கள்.

ஃ எம் ஜி ஆர் திராவிட கட்சியில் இருந்து வந்ததால் தன்னை நாத்தீகராகவே வெளிக்காட்டி, கடவுள் நம்பிக்கை உள்ளவராக காட்டியதே இல்லை. ஆனால் இவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததாக சொல்லப்படுகிறது. ரஜினி தன்னை ஒரு ஹிந்து என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும், இந்து மதத்திலும், கடவுளிலும் நம்பிக்கை உள்ள ஒரு ஆத்தீகவாதி. இவர் சில மனிதக் கடவுள்களையும் நம்புகிறவர். இமயமலைக்கு சென்று தியானம் செய்பவர். திருப்பதி கோயிலுக்கும், ராகவேந்திரா கோயிலுக்கும் போய் வருபவர்.

ஃ எம் ஜி ஆர் அரசியலுக்கு துணிந்து வந்தவர். பெரு வெற்றி அடைந்தவர். ரஜினி அரசியலில் குரல் கொடுப்பதோடு சரி. அரசியலுக்கு வருவார் என்று நான் நம்பவில்லை. அரசியலை பொறுத்தவரையில் இவர் இன்னும் வெற்றியடையவில்லை!

ஃ எம் ஜி ஆர் ஈழத் தமிழர்களால் மதிக்கப்படுபவர். ரஜினி, ஈழத் தமிழர்கள் பற்றி எதுவும் பேசாமலும், சோ ராமசாமியுடன் நட்பு பாராட்டுவதாலும், ஈழத் தமிழரின் எதிரி என்று கூட நம்பப்பட்டவர். சமீபத்தில் இவர் ஈழத் தமிழர்களுக்கு கொடுத்த குரல் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது!

ஃ எம் ஜி ஆர் தமிழ் படங்களில் மட்டும்தான் பொதுவாக நடித்தார். ரஜினி ஹிந்திப் படங்களிலும் பல தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார். எம் ஜி ஆர் நடித்த தமிழ்ப்படங்கள் சுமார் 136. ரஜினி கதாநாயகனாக நடித்த தமிழ் பட்ங்கள் சுமார் 75-80 இருக்கும்னு நினைக்கிறேன்.

ஃ எம் ஜி ஆர் பொன்மன செம்மல்,கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்று பலராலும் பாராட்டப்பட்ட ஒரு வள்ளல் பாரி வ¨கையை சேர்ந்தவர். ரஜினி தன்னால் ஆன உதவி செய்து இருக்கிறார். ஆனால் அவருக்கு அப்படி எதுவும் நல்ல பெயர் இதுவரை வரவில்லை.

ஃ எம் ஜி ஆருடைய கெட்ட புத்தகத்தில் போனால் தன்னைவிட வலிமையில்லாத துணை நடிகர்களை, நடிகைகளை ஒழித்துவிடுவார். மன்னிக்கவே மாட்டார். அவருக்கு இரக்க குணம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. ரஜினி, அதுபோல் யாரையும் ஒழித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக உதவி செய்தாரோ இல்லையோ, யாரையும் கெடுத்ததாக யாரும் இதுவரை புலம்பவில்லை.

-தொடரும்

Sunday, January 18, 2009

ஒரே பதிவு!! இரண்டு தலைப்புகள்!!!

நான் சில நாட்களுக்கு முன்னால் செய்த பதிவு!

"இந்தியா, அமெரிக்காவை பின்பற்றுமா? "

http://timeforsomelove.blogspot.com/2009/01/blog-post_10.html


பதிவர் ஒருவர் இன்று செய்த பதிவு!

"ஸ்விஸ் வங்கியும் இந்திய முதலீடுகளும்"

http://lkgpaiyan.blogspot.com/2009/01/blog-post_18.html

----------------------------------------

இரண்டு பதிவுகளிலும் சொல்லப்பட்ட விசயம் ஒரே விசயம்தான் அது இதுதான்!


நல்ல விசயங்கள் எங்கே இருந்தாலும் எடுத்துக்கனும். அதுதான் புத்திசாலித்தனம். சும்மா “ஆண்ட்டி அமெரிக்கன்” கொடி பிடிச்சே ஆகனும்னு அலையக்கூடாது.
அமெரிக்க பொருளாதார பிரச்சினையை சமாளிக்க, பலவிதங்களில் செயல்படுகிறார்கள். அதில் ஒண்ணுதான் ஐ ஆர் எஸ் (இண்டேர்னல் ரெவென்யு சர்விஸ், யு எஸ் எ), யு பி எஸ் (ஸ்விஸ் வங்கி) யை வலியுறுத்துவது.

என்னவென்று?

ஸ்விட்சர்லாந்தில், யு பி எஸ் வங்கியில் அமரிக்க குடிமகன்கள் வைத்துள்ள ரகசிய அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை எல்லாம் அவர்களுக்கு சொல்லனும் என்று ஐ ஆர் எஸ் ஆஃப் அமெரிக்கா கேட்டுள்ளது.

* அமெரிக்க குடிமகன் யாரும் அந்த வங்கியில் ரகசிய அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடாது.

* அதாவது எந்த அமெரிக்க குடிமகன்(ள்) அக்கவுண்ட் ம் $10,000 க்கு மேலே இருந்தால் அமெரிக்கா அரசாங்கத்திற்கு அந்த ஸ்விஸ் வங்கி சொல்லியே ஆகனும்!

காரணம் என்ன?

அந்தப்பணத்திற்கு வரும் வட்டி வருமானத்திற்கு அமெரிக்க குடிமகன்(ள்) வரி கட்டவேண்டு மென்பதால் ஐ ஆர் எஸ் க்கு அந்த யு பி எஸ் வங்கி இதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்கிறது.

இப்போ அமெரிக்கர்களிடம் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் வெளியே வந்தே ஆகனும் என்கிற ஒரு சூழ்நிலை!

இதுபோல் இந்தியாவும் செய்யுமா?

செய்யனும்!
<http://www.nytimes.com/2009/01/09/business/09ubs.html?_r=1>


நன்றி திரு.ராஜராஜ்!

=======================


இவர் ஓரளவுக்கு உண்மைதான் சொல்லுகிறார்.

* அதாவது இவர் படித்ததில் பிடித்ததை எழுதுகிறாராம்!

* ஆனால் தலைப்பை மட்டும் மாற்றி இருக்கிறார்.

* என்னுடைய பதிவின் லின்க் கொடுக்கப்படவில்லை!


இது ஒண்ணும் பெரிய ஆர்ட்டிக்கிள்னு நான் சொல்லவரவில்லை. ஆனால் இவர் தலைப்பை மட்டும் மாற்றி இன்னொருவர் எழுத்தை (குப்பையாக இருந்தாலும்) எழுதுவது தவறு.

அதுவும் என்னுடைய பதிவை காப்பி-பேஸ்ட் செய்துவிட்டு வேறு தலைப்பில் எழுதுவது தவறு!

இதுபோல் தவறு செய்பவர்களுக்கும், தமிழ்மணத்திற்கும் சொல்லவேண்டும் என்கிற நல்லெண்னத்தில் எழுதி இருக்கிறேன்.

சொல்லாமல் இதுபோல தவறை மன்னித்து விட்டுவிட்டால் இது தவறு என்றே நம் மக்களுக்கு தெரியாமல்போய்விடும். இதேபோல் தவறுகள் தொடரும்!

மற்றபடி இந்த பதிவரின் அறியாமை எனக்குப்புரிகிறது!


அவர் மேல் எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை :-)

ஸ்லம்டாஃக் மில்லியனர்- நமக்கு தேவையான ஒரு படம்!

இந்தியாவில் கால் செண்டர், ஐ டி பெருமை, ஐ ஐ எஸ் ஸி, ஐ ஐ டி தரமான படிப்பு, தாஜ்மஹால், காந்தி, புத்தா, கிருஷ்ணா என்று இந்தியப்புகழ்பாடத்தெரிந்த நாம், இந்தியாவில் எவ்வளவு கேவலமான வாழ்க்கை பல கோடிப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாக சொல்லுவதில்லை!

மூடி மறைப்பதேதான் நம் கலாச்சாரம். அதைத்தான் இன்று ஊர் சிரிக்கும் சத்தியம் கம்ப்யூட்டர் பித்தலாட்ட-ங்களில்கூடப் பார்த்தோம்.

இந்தியர்களில் பலர் படு கேவலமானவர்கள் என்று நமக்கு அடிக்கடி ஞாபகப் படுத்திக்கொள்வது நல்லது. இல்லை யென்றால் முட்டாளாகவே வாழ்ந்து செத்து விடுவோம்.

இந்தியர்கள், சத்தியம், தர்மம், கடவுள், கழுதை, காக்கா னு பெருமை பேசியே வாழ்ந்து அழிந்துபோகிறோம். இந்தியச்சேரிகள் பெருகி இந்திய மக்கள்த்தொகை அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டு இருக்கிறது. அதைப்பற்றி நமக்கென்ன கவலை? நான் தான் உயர்சாதி, பணக்காரன் ஆச்சே? என்று அவர்களைப்பார்த்து அருவெருத்துவிட்டு நாம் போய்க்கொண்டே இருக்கிறோம்.

இந்தியச்சேரி வாழ்க்கையையையும் அதில் வாழும் மனித மிருகங்களையும், அதில்மாட்டிக்கொண்டு அழியும் அப்பாவிகளையும் படம் பிடித்து உலகத்திற்கு காட்டி, இந்தியாவை கேவலப்படுத்தி இருக்கும் ஒரு தேவையான படம் இது.

வெள்ளைக்காரன் இன்னும் ஆண்டுகொண்டிருந்தால் இந்த சேரியை எல்லாம் அழிக்க ஒரு வழியுடன் வந்திருந்தாலும் வந்திருப்பான். நமக்குத்தான் அதை என்ன செய்வதென்று தெரியாமல் ஒதுங்கிப்போய்க்கொண்டு இருக்கிறோம். இல்லையென்றால் என்னைப்போல் அமெரிக்காவில் வந்து ஒளிந்துகொள்கிறோம்- வெட்கமே இல்லாமல்!

இந்தப்படத்தில்

* உடலெல்லாம் மலத்துடன் ஓடிச்சென்று அமிதாப்பிடம் ஆட்டோ கிராஃப் வாங்கும் சிறுவனை காட்டுகிறார்கள். இந்தியாவின் மானத்தை கப்பலேற்றுகிறார்கள் அமெரிக்கர்கள் மற்றும் வெள்ளைக்காரர்கள் என்று ஒருபுறம் கோபம் வந்தாலும், இதுபோல் சேரிவாழ்க்கை உலகுக்கு எடுத்துக்காட்டியாவது நாம் இதை ஒழிக்க ஏதாவது செய்துவிடமாட்டோமா என்ற நப்பாசை எனக்கு. கோல்டன் க்ளோப் கொடுத்து உலகத்திற்கே நம் இந்திய அசிங்கமான சேரி வாழக்கையை உலகமெங்கும் பறைசாற்றுகிறார்கள்!

* இந்தியாவில் சிறுவர்களை ஊனமாக்கி, அவர்களை வைத்து எப்படி பல மிருகங்கள் பொழைப்பு நடத்துக்கின்றன என்பதை பச்சையாக சொல்லுகிறார்கள்.

* இந்தியாவில் வேசித்தனம் பண்ணி மனித மிருகங்களாக வாழும் பலரின் கீழ்த்தரமான வாழ்க்கையையும் அப்பட்டமாக காட்டுகிறார்கள்.

* மும்பைச் சேரியை முதலில் சரிபண்ணுங்கடா! ராமர் கோயிலைப்பத்தி அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லாமல் சொல்லும் விசயங்கள் நம் மூடர்களுக்கு புரியுமா?

* இந்து முஸ்லிம் கலவரத்தில் எப்படியெல்லாம் ஏழைகள் அழிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்லி இருப்பதால், ராமர்/பாபர் பேரைச்சொல்லி பிழைப்பு நடத்தும் பணக்கார உயர்சாதி இந்து/முஸ்லிம் வெறியர்களுக்கும், மதவெறி தலை விரித்தாடும் சில பார்ப்பனர்களுக்கும் இந்தப்படத்தை சமர்ப்பிக்கலாம்!

நம்முடைய வருத்தம், கோபம்!

இந்தியாவில் உள்ள சேரிவாழ்க்கையைப்பற்றி எங்களை கேவலப்படுத்திவிட்டார்கள் என்று கொதித்தெழும் பலர் உண்மையை மறைத்தே வாழ்ந்து சாகனும்னு ஆசைப் படுகிறாரகள் போலும்.

ஆமாம் நம்மை கேவலப்படுத்துகிறார்கள்! புத்தா காந்தி பிறந்த நாட்டில் வாழும் மிருகவாழ்க்கையையும், சேரியில் சேற்றில் புரண்டு வாழும் ஏழைகளையும் வெளி உலகுக்கு காட்டுகிறார்கள்!

நம்மில் பலர் கேவலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதால்தானே இந்தக் கேவலம்?

அதனால, உங்களுக்கும், எனக்கும், அரசியல்வாதிகளுக்கும், ராமர் பேரைச்சொல்லி பிழைப்பு நடத்தும் மதவாதிகளுக்கும், பயங்கரவாதத்தை வரவேற்கும் முட்டாள்களுக்கும் இந்தப்படம் ஒரு நல்ல படிப்பினை!

ஆமா, நம்மை பார்த்து ஊர் சிரிக்கிறது!

உலகம் சிரிக்கிறது!

சிரிக்கட்டும்!

என்ன செய்யப்போகிறோம் அவர்கள் சிரிப்பை நிறுத்த?!

Thursday, January 15, 2009

நடிகர் அமீர் பற்றி சில விசயங்கள்!

தமிழ் இயக்குனர் அமீர் ஒரு திறமைமிக்க இயக்குனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவர் இயக்கிய படங்கள் எனக்கு ரொம்பப்பிடிக்கும். இவருடைய படங்கள் மௌனம் பேசியதே, இராம், பருத்திவீரன் மூன்றுமே சிறப்பான தமிழ்ப்படங்கள். இவர், தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த முத்து. இப்படி ஒரு பக்கம் நாம் சந்தோஷப் பட்டாலும், சில விசயங்கள் நமக்கு இடிக்கிறது.

இவர் கொஞ்சம் அளவுக்கு அதிகம் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது. காட் ஃபாதர் படத்தில் ஒரு வசனம் உண்டு. மார்லன் பிராண்டோ சொல்வார்,

I have a sentimental weakness towards my children and I spoiled them. You see, they talk when they should listen!

அமீர் அப்படி என்ன செய்தார்னு பார்ப்போம்,

ஃ மொழி படவிழாவில், சிவாஜி படத்தைப்பற்றி எழுத்தாளர் ஞாநி மற்றும் பலர் இறக்கிப்பேசியதற்கு எதிர்த்து குரல் கொடுத்தார். ஒரு வெற்றிவிழாவில் எதற்கு இன்னொரு படத்தை இறக்கனும் என்றார்.

ஃ பிறகு, சிவாஜி படத்திற்கு ஏதோ ஒரு சின்ன "அவார்ட்" கொடுத்ததை மனதில்கொண்டு, ரஜினி மற்றும் விஜய்க்கு விசிறிகள் அதிகாமாக உள்ளதால் தகுதி இல்லாவிட்டாலும் "அவார்ட்" கொடுக்கிறார்கள் என்பதுபோல சொன்னார்.

ஃ பருத்திவீரன் ஒரு தலை சிறந்த தமிழ் படமாக அமைந்தாலும், அந்த படத்தால் சிவக்குமார் குடும்பத்துடன் பல பிரச்சினைகள் இவருக்கு. சிவக்குமார் இது நாள்வரை யாரிடமும் கெட்டபெயர் வாங்கியது இல்லை.

ஃ இது போதாதென்று ஒரு சில எழுத்தாளர்கள் அமீருடைய பருத்திவீரனையும், கமலின் விருமாண்டியையும் விமர்சித்துப்பேசி, பருத்திவீரன் விருமாண்டியைவிட நல்ல படம் என்று சொல்லி கமலுக்கும் அவர் ரசிகர்களுக்கும் எரிச்சலை கிளப்புகிறார்கள்.

இப்போ அமீர், சகநடிகர்கள் கமல், ரஜினி, சிவகுமார், விஜய், சூர்யா, கார்த்தி என்று எல்லா நடிகர்களிடமும் பல காராணங்களால் உரசிக்கொண்டது போல் இருக்கு. இது இவருக்கு தேவையா என்று தெரியவில்லை! இந்நிலையில் இவர் நடிகராக முயற்சிக்கிறார். யோகி என்கிற படத்தில் கதாநாயகனாக சுப்பிரமணியன் சிவா என்பவர் இயக்கத்தில் நடிக்கிறார்.

அமீர் போன்ற இளம் நடிகர்கள், வளர்ந்த நடிகர்கள் எல்லோரையும் பகைத்துக்கொள்வது நல்லதில்லை. இதில் நடிகர்கள் யாரும் இவரை பழிவாங்கப்போவதில்லை என்றாலும் அவர்களை வணங்கும் ரசிகர்கள்?

யோகி வெளிவந்தால்தான் தெரியும் நடிகராக அமீர் பிரகாசிப்பாரா இல்லை யோகிதான் இவருக்கு முதலும், கடைசி படமுமா என்று.

Wednesday, January 14, 2009

தெய்வம் நின்று கேட்குமா?

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஊருக்கு திரும்பி வந்து இருந்தேன். ஜெட்-லாக் எல்லாம் போன பிறகு, சாயங்காலமாக நண்பன் மணியோட ஒரு வால்க் போகலாம் என்று புறப்பட்டேன். அப்படிப் போகும்போதுதான் ஊர் நிலவரம் ஊர் முன்னேற்றம் எல்லாம் தெரிந்துகொள்வது.

"ரவி! நான் சொல்றதைக் கேளுடா! ரொம்ப நாளைக்கு அப்புறம் ஊருக்கு வந்திருக்க. ஆளாளுக்கு நூறைக்கொடு, இருநூறு கொடுனு கொல்லுவானுக கவனமாக இரு!" என்றான் நண்பன் மணி.

அவன் அப்படி சொல்லி வாய் மூடும்முன்னால நம்ம அண்ணே "கஞ்சா பாலு" எதிரே வந்தார்! அண்ணனை சின்ன வயசில் இருந்து தெரியும். எந்நேரமும் போதையில்தான் இருப்பார். ஒரு காலத்தில் பெரிய சண்டியர். ரவி ரவி னு என் மேலே உயிரா இருப்பாரு பாலு அண்ணே!


"என்ன ரவி எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா? ஆஸ்த்ரேலியாவிலயா இருக்கீங்க?" என்றார் பாலு அண்ணே.

"இல்லண்ணே அமெரிக்காவில் இருக்கேன். ஒரு மாசம் இங்கதான் இருப்பேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"என்ன தம்பி அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கீங்க! அண்ணனை கவனிக்கிறதில்லையா?"

"நாளைக்கு சாயங்காலம்போல வீட்டுக்கு வாங்க அண்ணே!"

"அதெல்லாம் எதுக்குப்பா, எதுவும் ஃபாரின் சரக்கு கிரக்கு கொண்டு வந்து இருக்கீங்களா?"

"இல்லையே அண்ணே! வேற டி-ஷர்ட் மாதிரி ஏதாவது வீட்டிலே இருக்கும். வீட்டுக்கு வாங்க அண்ணே உங்க சைஸ்க்கு சரியா இருக்கானு பார்த்து தர்றேன்!"

"இல்லைப்பா ஒரு குவாட்டருக்கு காசு கொடுத்தால், அண்ணே உன் பேரைச்சொல்லி நீ ஊருக்கு வந்த சந்தோஷத்தை கொண்டாடுவேன்!"

"இந்தாங்க 200 ரூபா இருக்கு போதுமா?"

நான் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக நகர்ந்தார் அண்ணன் பாலு. என் நண்பன் மணி என்னை திட்டினான்.

"ஏண்டா இப்படி தண்ணி அடிக்கிறதுக்கு காசு கொடுக்கிற?"

"என்ன பண்ண சொல்ற? சின்ன வயசில் இருந்து தெரியும். நமக்கு ஒண்ணுனா உயிரைக் கொடுப்பாரு மனுஷன்! உனக்கு தெரியுமா என்னனு தெரியல. பலபிரச்சினைகளில் அண்ணன் உதவி செஞ்சிருக்காருடா"

"நீ வேற அதெல்லாம் அந்தக்காலம்டா. இப்போ தண்ணி அடிச்சு அடிச்சு தண்ணிக்கு அடிமையாயிட்டான் மனுஷன்!"

"ஆமா, ரொம்பவே தளர்ந்துட்டார்டா! சரி விடுடா. இதுதான் அவருக்கு சந்தோஷம்! நம்ம சொல்லியா திருந்தப்போறாரு!"

"என்னவோ போ! இந்த ஊரில் பொறந்து நீ எப்படிடா அமெரிக்கா போன? என் ஃப்ரெண்டு அமெரிகால இருக்கான் னா எவன் நம்புறான்?!"

"என்ன செய்றது? என் தலை எழுத்து! பொறந்த ஊர்ல ராஜாவா இருக்கிறதைவிட, அங்கே போய் பிச்சை எடுக்கனும்னு இருக்கு!"

"சரி வாடா, அப்படியே நடந்து போய் டீ குடிச்சுட்டு வரலாம்! ரவி! அங்கே பாரு! யார் வர்றா தெரியுதா?"

"யார்டா அது? சரியா தெரியலையே!"

"இதாண்டா நம்ம "மன்னாரு விஜயன்"! இப்போ தாசில்தாரா இருக்கான்"

"நிஜம்மாவா!"

" அதை ஏன் கேக்கிற. இவன் கதை தெரியுமில்லை?"

"காலேஜிலே என்னா அநியாயம் பண்ணுவான் தெரியுமா மணி! பாவம்டா பொண்ணுங்களும் ப்ரொஃபசர்களும் நடுங்குவானுக. இவன் இன்னைக்கு தாசில்தாரா! என்னத்தை சொல்ல போ!"

"இப்போ அதான் அனுபவிக்கிறான்"

"என்னடா சொல்ற?"

"உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு ஸ்கூல் பொண்ண சைட் அடிச்சு கல்யாணம் பண்ணி வந்தான் இல்லையா?"

"ஆமா"

"இவன் எப்போபார்த்தாலும் குடிச்சிட்டு குடிச்சிட்டு வர்றது. அவளைப்போட்டு அடிக்கிறது. இவன் தம்பி, பாண்டி, வீட்டிலேயே இருப்பான் இல்லை?

"ஆமாம் ஏதோ கரஸ்ல படிச்சான்லடா? அவனா?"

"ஆமா, அவனுக்கும் இவன் மனைவிக்கும் "பிக் அப்" ஆகி "லவ்" ஆகிப்போச்சு"

"கூடப்பிறந்த தம்பியா!!!"

"இங்கே போற போக்க பார்த்தா அமெரிக்கா பரவாயில்லைனு சொல்லுவ! ஊரு முந்திமாதி இல்லப்பா எல்லாம் நாறுது"

"அப்புறம்?"

"என்ன செய்வான்? அதுக்கு தம்பியைத்தான் பிடிக்குதாம்!"

"லவ் மேரேஜ்தானேடா அவன் பண்ணினான்?"

"ஆமா. இதுவும் லவ்தான். அண்ணன் மேலே இருந்தது இன்ஃபாக்சுவேஷனாம்! அந்த அம்மா உண்மையான லவ் தம்பிட்டதான் பார்த்ததாம்"

"சரி, விசயத்துக்கு வாடா, மணி! இப்போ என்ன ஆச்சு?"

"என்ன ஆகும்? நாலு பேர் சொல்லிப்பார்த்தானுக. இவன் தம்பி கேக்கிறதா இல்லை! அடிச்சு பார்த்தான். நாலு பெரிய மனுஷன்கள் சொல்லிப்பார்த்தானுக. அந்த பொண்ணும் அவரு ரொம்ப குடிக்கிறாரு, அடிக்கிறாருனு எதிர்த்து பேசுது. அவரோட வாழ முடியாதுனு சொல்லுது"

"அப்புறம்?"

"என்ன பண்ணுவான் பாவம்?. இப்போ அந்தப்பொண்ணு பொறந்த வீட்டுக்கு போயிருச்சு. அவங்க வீட்டில் இவனை சுத்தமா பிடிக்காது.தன் பொண்ண ஏமாத்தி இழுத்துட்டு போயிட்டான்னு கோபமா இருந்தானுக. அது அங்கே என்ன சொல்லுதோ அதுதான் வேதம். இப்போ விவாகரத்து பண்ணப்போகுதாம் இவனை!"

"பண்ணிட்டு?'

"தம்பியை கல்யாணம் பண்ணப்போதாம்! அது ஃப்யூச்சர் ப்ளானாம்'

"நாசமா போச்சு போ!"

"படிக்கும்போது கொஞ்ச நஞ்ச அக்கிரமமா பண்ணினான் இவன்? அதான் இந்த லைஃப்பிலயே அனுபவிக்கிறான். ஊரில் மானம் போச்சுடா! வேலைக்குபோறது, ஈவனிங் வந்து தண்ணியப் போட்டுட்டு போதையிலேயே திரிகிறான்"

Tuesday, January 13, 2009

ஏ ஆர் ரகுமான் அடுத்த "ஆஸ்கர் (தமிழ்) நாயகனா"?

ஏ ஆர் ரகுமான் "கோல்டன் க்ளோப்" அவார்ட் பெற்ற முதல் தமிழன்!













இன்னும் நான் "ஸ்லம் டாக் மில்லியனர்" பார்க்கவில்லை. நம்மதான் தமிழனாச்சே! நமக்கு இந்திப்படமெல்லாம் பிடிக்குமா? இது ஒரு இந்தி-ஆங்கிலம் கலந்த படம்னு சொல்றாங்க!

நம்ம ஏ ஆர் ரகுமான் "பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர்" க்கு ஒரு "கோல்டன் க்ளோப்" அவார்ட் வாங்கி இருக்கார்! இதை அடுத்து ஒரு ஆஸ்கரும் வாங்கினாலும் வாங்கிவிடுவார்.

http://edition.cnn.com/2009/SHOWBIZ/Movies/01/11/golden.globe.list/
ஏ ஆர் ரகுமானிடம் என்ன ஒரு சிறப்புனா, இவர் எதுக்குமே அலட்டிக்கொள்வது இல்லை! அதுதான் இவர் வெற்றிக்கு காரணமானு தெரியலை. நம்ம "ஆஸ்கர் நாயகரெ"ல்லாம் இன்னும் "கோல்டன் க்ளோப்" கூட வாங்கவில்லை.


ஏ ஆர் ரகுமான் இந்திப்படத்திற்கு போனதால்தான் இதுபோல் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றுதான் தோன்றுகிறது. என்னதான் நம்ம 70 கோடி யில் சிவாஜி தசாவதாரம் மற்றும் 150 கோடியில் எந்திரன், மர்மயோகி போன்ற படங்கள் எடுத்தாலும் இந்திப்படத்திற்குத்தான் உலக அளவில் கவனிப்பு அதிகம். "யு கே பாக்ஸ் ஆஃபிஸ்" பார்த்தால் தெரியும், ஒரு சாதாரண "சாருக் கான்" மற்றும் அமீர் கான் படங்கள் நம்ம பெரிய பொருட்செலவில் எடுத்த படங்கள் தசாவதாரம் மற்றும் சிவாஜியை விட அதிக கலக்ஷன் பெறுகிறது. அதனால் இந்திப்படத்தில் நுழைந்ததால்தான் இவருக்கு இந்த அளவுக்கு உயர முடிந்தது என்பது ஒரு கசப்பான உண்மை!

எது எப்படி இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் ஒரு தமிழர். கே பாலசந்தர் தயாரிப்பில், மணி ரத்தினம் இயக்கிய "ரோஜா" என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகிற்கு வந்தவர்.

அவர் தாய் மொழி தமிழ்! அதனால் நம்ம எல்லோரும் இந்த வெற்றியை நினைத்து பெருமிதம் அடையனும்! விரைவில் அவருக்கு ஆஸ்கர் கிடைத்து அவர் அலட்டாத ஆஸ்கர் நாயகனாக வாழ்த்துக்கள்.

Sunday, January 11, 2009

காதலுடன்-7

கொஞ்ச நேரத்தில் காவியா கிளம்பினாள். ரமேஷ், அவளிடம்,

“பேசிப்பாருங்க, காவியா. அவர் புரிஞ்சுக்கவே இல்லைனா கார்த்திக்கை “டைவோர்ஸ்” பண்ணிடுங்க!” என்றான் குரூரமாக.

“அது அவ்வளவு ஈசியில்லையே, ரமேஷ்! சரி பார்க்கலாம் சந்தியா, ரமேஷ்!” என்று சிரித்துவைத்தாள்.

காவியா கிளம்பி வெளியே போனவுடன்,

"Are you serious, Ramesh?! கார்த்திக் எவ்வளவு ஒரு நல்ல அப்பா தெரியுமா உங்களுக்கு? என்னுடைய கேஸ் ரொம்ப வேற ரமேஷ். நான் அவள் சூழ்நிலையில் இருந்தால் என் தேவைகளை குறைத்துக்கொள்வேன். கவனமாக அவரை ஒழுங்கா திசை திருப்புவேன் அல்லது முயற்சிப்பேன்"

“டென்ஷன் ஆகாதே சந்தியா! அவளிடம் அப்படி சொல்லிப்பார்த்தேன் அவ்வளவுதான். அப்படி சொன்னால்தான் அவள் அவரிடம் உள்ள நல்லவைகளையும் யோசிப்பாள்”

“சரி, இதுக்கு என்னதான் தீர்வு ரமேஷ்?”

“எனக்கு உண்மையிலேயே தெரியலை சந்தியா. சரி நான் புறப்படவா?”

“இப்போ என்ன அவசரம்? அமெரிக்கன் ஃபட்பால் பார்க்கலாம் இல்லையா?”

“நீ ஃபுட்பால் லாம் பார்ப்பியா என்ன?”

“நான் உங்களைத்தானே பார்க்கச்சொன்னேன்? எனக்கு நம்ம ஊர் ஃபுட்பால்தான் புரியும். இது என்ன ஒண்ணுமே புரியமாட்டேன்கிறது, ரமேஷ். சண்டை மாதிரி இருக்கு”

“இது நல்ல விளையாட்டுத்தான் சந்தியா. எனக்கும் முதலில் புரியலை. அப்புறம் ஒரு அமெரிக்கன் ஃப்ரெண்டு சொல்லிக்கொடுத்தார். அதிலிருந்துதான் விளையாட்டு புரிந்தது”

“நம்ம இந்தியர்கள் எல்லாம் இங்கே வந்தும் க்ரிக்கட் தானே பார்க்கிறாங்க? ஒரு ஆள் "சப்ஸ்க்ரைப்" பண்ணி எல்லோரும் சேர்ந்து பார்க்கிறாங்க”

“நான் இல்லை, சந்தியா! எனக்கு அமெரிக்கன் ஃபுட்பால் தான் பிடிக்கும். நான் எனக்கு தெரிந்ததை சொல்லித்தரலாம்தான். ஆனால் உனக்கு இந்த "கேம்" போர் அடிக்குமோனு பயம்மா இருக்கு. அதுக்கப்புறம் லக்ஷ்மியோட ஒரு "அப்பாயிண்ட்மெண்ட்" இருக்கு சந்தியா'

“லக்ஷ்மியோட? அப்பாயிண்ட்மெண்ட்டா அல்லது டேட் டா?” என்றாள் குதர்க்கமாக.

“இல்லை, இது ஒரு டிஸ்கஷன் தான். வேலை சம்மந்தப்பட்டது” என்றான் புன்னகையுடன்.

“சரி போய் உங்க லக்ஷ்மியோட டிஸ்கஸ் பண்ணுங்க, ரமேஷ்” என்றாள் ஒரு மாதிரியாக.

“என்னை "டீஸ்" பண்றதிலே அப்படி என்ன ஒரு "ப்ளஷர்" சந்தியா?”

“சாரி ரமேஷ். சரி போயிட்டு வாங்க ரமேஷ்! வந்ததற்கு தேங்க்ஸ்! எனக்கு பொழுது போனதே தெரியலை” என்றாள் புன்ன்கையுடன்.

“ரொம்ப நல்லா சமைக்கிற சந்தியா! நோ அஃபெண்ஸ், பொதுவா வேலை செய்ற பொண்ணுங்களுக்கு சமைக்கத்தெரியாதுனு சொல்லுவாங்க. நீ விதிவிலக்கு போல இருக்கு! தேங்க்ஸ்”

ரமேஷ் கிளம்பி போனான். சந்தியா எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு டைனிங் டேபிள் மற்றும் வீட்டை அவசரமாக சுத்தம் செய்துவிட்டு, ஒரு சில முக்கியமான ஷாப்பிங் பண்ண வேண்டுமென்று கிளம்பி அருகில் உள்ள “டார்கெட்” க்கு சென்றாள்.

"டார்கெட்" டில், பெண்கள் பகுதியில் இவளுக்கு தேவையான ஒரு “ஆல்வேஸ்” எடுக்கும்போது அருகில் இவளைவிட வயதில் கொஞ்சம் குறைந்த ஒரு இந்தியப்பெண் இருந்தாள். அவளைப்பார்த்து “ஹலோ” சொல்லிவைத்தாள். அப்பொழுதான் கவனித்தாள், அருகிலிருந்து ராஜு வந்து அந்தப்பெண் வைத்திருந்த “கார்ட்” ல ஒரு "ஸ்பீட் ஸ்டிக்" மற்றும் "டிஸ்போசபிள் ரேஸ்ரும்" எடுத்துப்போட்டார்.

அவளுக்குப்புரிந்தது அவள் ஹலோ சொன்ன இந்தியப்பெண் ராஜு வின் மனைவி என்று! மிகவும் அருகில் ராஜுவைப் பார்த்துவிட்டதால், “ஹல்லோ ராஜு, ஹவ் ஆர் யு?” என்று புன்னகைத்தாள்.

-தொடரும்

Saturday, January 10, 2009

சூப்பர் ஸ்டார் ரஜினி வாங்கிய சம்பளம் ரூ.2500!

இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் ரூ. 20 கோடி என்கிறார்கள்! தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இவர்தான் அதிக சம்பளம் வாங்குகிறதாக சொல்லப்படுகிறது. இவரை நம்பி ரூ 150 கோடிகளை செலவழித்து ஒரு பிரமாண்டமான படம் எடுக்க சன் பிக்சர்ஸ் தயாராக உள்ளது. அந்தப்படைப்புதான், ரஜினியும், ஐஸ்வர்யா பச்சனும் இணைந்து சங்கர் இயக்கத்தில் உருவாகும் “எந்திரன்”.

ஆனால், இவர் சினிமா உலகத்தில் நுழைந்து வில்லனாக நடிக்க ஆரம்பித்தபோது நடித்த படங்களில் ஒன்று பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. இதில் இவர் நடிக்கும்போது இவருக்கு “பரட்டை” என்ற வில்லன் பாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. 2500 மட்டுமே என்கிறார் இவரை வைத்து டைரக்ட் செய்த இயக்குனர் பாரதிராஜா! அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு போன்ற படங்களுக்கு பிறகு வந்ததுதான் 16 வயதினிலே. ஆனால், இந்தப்படத்தில் வந்த “பரட்டையன்” ரஜினி பாத்திரம், ரஜினிக்கு ஒரு மாமகுடம் சூட்டப்படவேண்டிய ஒன்று. தமிழ் சினிமா வரலாற்றில் அதுபோல் ஒரு வில்லன் பாத்திரத்தை அன்று தேதிக்கு யாரும் பார்த்ததில்லை என்கிறார்கள். எம் ஆர் ராதா, அசோகன், நம்பியார், பி எஸ் வீரப்பா போன்றவர்கள் செய்த வில்லன் பாத்திரங்களுக்கும் "பரட்டையன்" எனற பாரதிராஜா உருவாக்கிய வில்லனுக்கும் வித்தியாசங்கள் அதிகம்!

இதில் பரட்டையனாக இவர் பேசும் வசனங்கள்,

“இவ ஆத்தாளுக்கு தாவணி போட்டாக்கூட நல்லாதாண்டா இருக்கும்”

“இது எப்படி இருக்கு?”

“வத்திப்பெட்டி கேட்டீங்க இல்ல? நானே பத்த வைக்கிறேன்”

போன்றவை இவருக்கு தமிழ் சினிமாவின் படிக்கட்டுகளில் பலபடிகளுக்கு மேலே ஏற உதவியவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு பாரதிராஜாவுக்கும் ரஜினிக்கும் சில மனக்கசப்புகள் வந்தது. பிறகு சமாதானம் ஆகி, கொடி பறக்குது படத்தில் மறுபடியும் இணைந்தார்கள். அந்தப் படம் அவ்வளவு சிறப்பாக வரவில்லை!

இந்தியா, அமெரிக்காவை பின்பற்றுமா?

நல்ல விசயங்கள் எங்கே இருந்தாலும் எடுத்துக்கனும். அதுதான் புத்திசாலித்தனம். சும்மா “ஆண்ட்டி அமெரிக்கன்” கொடி பிடிச்சே ஆகனும்னு அலையக்கூடாது.

அமெரிக்க பொருளாதார பிரச்சினையை சமாளிக்க, பலவிதங்களில் செயல்படுகிறார்கள். அதில் ஒண்ணுதான் ஐ ஆர் எஸ் (இண்டேர்னல் ரெவென்யு சர்விஸ், யு எஸ் எ), யு பி எஸ் (ஸ்விஸ் வங்கி) யை வலியுறுத்துவது.

என்னவென்று?

ஸ்விட்சர்லாந்தில், யு பி எஸ் வங்கியில் அமரிக்க குடிமகன்கள் வைத்துள்ள ரகசிய அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை எல்லாம் அவர்களுக்கு சொல்லனும் என்று ஐ ஆர் எஸ் ஆஃப் அமெரிக்கா கேட்டுள்ளது.

* அமெரிக்க குடிமகன் யாரும் அந்த வங்கியில் ரகசிய அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடாது.


* அதாவது எந்த அமெரிக்க குடிமகன்(ள்) அக்கவுண்ட் ம் $10,000 க்கு மேலே இருந்தால் அமெரிக்கா அரசாங்கத்திற்கு அந்த ஸ்விஸ் வங்கி சொல்லியே ஆகனும்!

காரணம் என்ன?

அந்தப்பணத்திற்கு வரும் வட்டி வருமானத்திற்கு அமெரிக்க குடிமகன்(ள்) வரி கட்டவேண்டு மென்பதால் ஐ ஆர் எஸ் க்கு அந்த யு பி எஸ் வங்கி இதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்கிறது.

இப்போ அமெரிக்கர்களிடம் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் வெளியே வந்தே ஆகனும் என்கிற ஒரு சூழ்நிலை!

இதுபோல் இந்தியாவும் செய்யுமா?

செய்யனும்!

<http://www.nytimes.com/2009/01/09/business/09ubs.html?_r=1>

நன்றி திரு.ராஜராஜ்!

Friday, January 9, 2009

என் "கிட்னி" யை திருப்பிக் கொடு!!! (பார்ட் 2)

இப்போத்தான் இந்தக் கதையை கொஞ்சம் உள்ளே இறங்கி பார்த்தேன். முழு விபரமும் தெரிந்துகொண்டு பேசுவது நல்லதில்லையா?

ரிச்சர்ட் பேட்டிஸ்டா (கணவர்) வின் கோபத்திற்கு காரணம் என்ன வென்றால், அந்த அம்மா (இவர் மனைவி, டனெல் பேட்டிஸ்டா) இவர் கிட்னியை வாங்கி புதுவாழ்வு பெற்று இவருடைய இதயத்தை உடைத்துவிட்டதாம்!!!

எப்படி??

மனைவிக்கு இவர் தன்னுடைய கிட்னியை கொடுத்து இருக்கிறார். இவன் கிட்னி நல்லா மேட்ச் (1 இன் 700,000) ஆகி, அந்த அம்மாவுக்கு மினெசோட்டாவில் ஒரு ஆஸ்பத்திரியில் சர்ஜரி நடந்ததாம். வெற்றிகரமாக எல்லாம் முடிந்து நல்லா ஹெல்த்தியா ஆனவுடன், இந்த அம்மா கராத்தே கற்றுக்கொள்ள போச்சாம். அப்போ ஏதோ லேசா இந்த அம்மாவுக்கு அடிபட்டுவிட்டதாம். அடி பட்டதும் அதை ட்ரீட் பண்ண ஒரு "ஃபிசிகல் தெரப்பிஸ்ட்" இடம் போனதாம். அந்த "ஃபிஸிகல் தெரப்பிஸ்ட்" க்கும் இவர் மனைவிக்கும் ஏதோ "காதல்" உண்டாகிவிட்டதாம்.

இதில் ஆரம்பித்த பிரச்சினை வளர்கிறது. இந்த அம்மாதான் ரிச்ச்சர்ட் பேட்டிஸ்டாவை விவாகரத்து பண்ணி, இவர் பணத்தை யெல்லாம் வாங்கிக்கொண்டது போல இருக்கு. அந்த "ஃபிஸிகல் தெரப்பிஸ்ட்" வுடன் இப்போ சேர்ந்து "வாழ்கிறதோ" என்னவோ தெரியலை. அந்த அம்மா ஒரு நர்ஸ் என்பது போல தோனுது. ரிச்சர்ட் பேட்டிஸ்டா அளவுக்கு படிப்போ பணமோ அவரிடம் (மனைவியிடம்) இல்லை போல் தோனுது.

இந்த டாக்டர், ரிச்சர்ட் பேட்டிஸ்டா, இந்த அளவுக்கு இந்த பிரச்சினையை பெரிதாக்குவதற்கு காரணம், இவரை ஏமாற்றிவிட்டு அந்த அம்மா இன்னொருவரை தேர்ந்தெடுத்ததால்தான் என்கிறார், பாவம்! :(

அந்த அம்மா (இவர் மனைவி) நன்றி இல்லாதவள்! என்று அழுகிறார் ரிச்சர்ட் பேட்டிஸ்டா! :(

Thursday, January 8, 2009

என் "கிட்னி"யை திருப்பிக்கொடு!!!

ரிச்சர்ட் பேட்டிஸ்டா (Richard Batista), நியுயார்க்கை சேர்ந்த ஒரு டாக்டர், தன் மனைவி, டானெல் பேட்டிஸ்டா (Dawnell Batista) வுக்கு தன்னுடைய ஒரு கிட்னியைக் கொடுத்து காப்பாற்றி உள்ளார்.

ஆனால் இப்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது.

அதனால், மனைவியை தன் கிட்னியை திருப்பிக் கொடு என்கிறார்!

இல்லையென்றால் 1.5 மில்லியன் டாலர் திருப்பிக்கொடுக்கச் சொல்லி அவரை சட்டப்பூர்வமாக அனுகுகிறார்.

இது எப்படி இருக்கு?!

அமெரிக்காவின் “பொழுதுபோக்கு வியாபார” வீழ்ச்சி!

அமெரிக்காவில் அடுத்த பெயில் அவுட்! 5 பில்லியன் டாலர்கள்!

யாரு கேட்கிறார்கள்?

“காமப்படங்கள்” எடுக்கும் தொழிலதிபர்கள் அரசாங்கத்தின் உதவியை நாடுகிறார்கள். அமெரிக்கர்கள் பொருளாதார வீழ்ச்சியால், இவர்கள் "செக்ஸுவல் ஆக்டிவிட்டி" குறைந்து விட்டதாம்.

அதனால் இவர்களுக்கு உதவி தேவையாம். பாவம் அழுகிறார்கள்!

அரசாங்கம் உதவனும், இல்லைனா அந்த கடவுளாவது இவர்களுக்கு உதவுவாரா?

Yeah, In God we trust!

பைபிள்ப்படி போர்னோகிராஃபி தவறான ஒன்று!

எனக்கு வரவர ரொம்ப குழப்பமாயிருக்குங்க!

நாய் விற்ற காசு குரைக்கவாசெய்யும்?! என்பார்கள்.

"சூப்பர் பவர்" ஆகனும்னா எப்படி வேணா பணம் சம்பாரிக்கனும் போல!

இதில் என்ன வேடிக்கை என்றால், இதைப்பற்றி பேசும்போது எல்லோரும் ஒரு "விசமப் புன்னகையுடன்" பேசுறாங்க.

இதுதான் எனக்கு பிரச்சினை!

சாதாரண அமெரிக்க குடிமகனும் சரி, சி என் என் அனலிஸ்ட் ம் சரி. எல்லோருமே இந்த ஒரு "கேவலமான சகிக்கமுடியாத புன்னகையுடன்" தான் இதைப்பற்றி பேசுகிறார்கள்!

எதுக்கு அந்த "சிரிப்பு"???

அமெரிக்கர்களான உங்களின் பார்வைப்படி

* இது தப்பு இல்லை!

* இதை வைத்து நீங்கள் பல பில்லியன்கள் சம்பாரிக்கிறீங்க!

* இதைப்பற்றி வெட்கப்படவோ, கிட்டியாக ஃபீல் பண்ணுவதோ இல்லை!

* நான் எப்படி வேணா பணம் சம்பாரிப்பேன்னு சொல்றீங்க.

* நாய்விற்ற காசு குரைப்பதில்லை!

உண்மைதான்!

எல்லாம், சரிதான், அப்போ என்ன *** க்கு இந்த "அசட்டுப் புன்னகை" ???

உங்களுக்கே உங்க பொழைப்பு கேவலமா இருக்கா?

இல்லைனா உங்களைப்பார்த்து நீங்களே சிரிக்கிறீங்களா?

Wednesday, January 7, 2009

இஸ்ரேல் vs காஸா ஸ்ட்ரிப் & இந்தியா vs பாக்கிஸ்தான்

இன்று மட்டுமல்ல, என்றுமே இஸ்ரேல் போரில் இல்லாமல் இருக்கிற நாட்கள் மிகவும் குறைவு. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சண்டை நடந்து கொண்டேதான் இருக்கிறது. இவர்கள் சண்டைபோடும்போது, இஸ்ரேலின் வீரபிரதாபங்களைத்தான் அமெரிக்க ஊடகங்கள் பேசுவதுண்டு. அதாவது இந்த சண்டை நியாயமானது என்பதுதான் அமெரிக்காவின் வாதம்.

அதே நேரத்தில், இந்தியா-பாக்கிஸ்தான் சண்டை என்று வந்துவிட்டால், அமெரிக்கா அதில் உள்ள நியாயத்தைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. ஏதோ தேவையே இல்லாமல் இரண்டு நாடுகளும் மோதிக்கொள்வது போலவும், இரண்டு நாடுகள் மேலேயும் தவறுபோலவும், இரண்டு நாடுகளும் அணுகுண்டுகளை வீசி ஒருவரை ஒருவர் அழிக்கப்போவது போலவும் அமெரிக்கா ஊடகங்களும், அரசாங்கமும் மக்களும் பேசுகிறார்கள்.

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை! அமெரிக்கர்கள் பேசும் நியாயமும் வியாக்யாணங்களும். இவர்கள் கவலை நியாயமானதா? அப்படியென்றால் இஸ்ரேலால் அணுகுண்டு, இந்தியாவைப்போல் உருவாக்க முடியாதா? இல்லை இஸ்ரேல் எது செய்தாலும் சரியா? இதுதான் அமெரிக்காவின் (அ)நியாயமா?

Israel's Nuclear Weapon Capability: An Overview
The Risk Report
Volume 2 Number 4 (July-August 1996).

http://www.wisconsinproject.org/countries/israel/nuke.html

Tuesday, January 6, 2009

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) – 10



பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9.

எல்லா நேரமும் என்னுடைய குடும்பத்தில் இத்தனை பிரச்சினைகள் இருந்தது என்று சொல்ல முடியாது, ஒரு சில சமயம் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டார்ளோ? என்று நான் நினைத்து சந்தோஷப்படும் அளவுக்கு ஏதாவது முன்னேற்றம் நிகழும். ஒன்று சொன்னால் எனக்கே நம்ப சிரமமாக இருக்கும், என்னுடைய பெற்றோர்களின் திருமணம் காதல் திருமணம்! 4 வருடங்கள் அம்மாவை ஒரு தலையாக(!) காதலித்து அப்பா திருமணம் செய்துக்கொண்டாராம். காதல் என்றால் வேறெதுவும் ரொமாண்ட்டிக்காக கற்பனை பண்ணிவிடாதீர்கள். அம்மாவுக்கு ஸ்கூல் முடிந்து வரும் போது பத்திரமாக வீடு வரை பின் தொடர்ந்து வந்து பாதுகாப்பு கொடுப்பது, டைப்பிங் க்ளாஸில் இருந்து பாதுகாப்பு கொடுப்பது- இப்படி தொடர்ந்து இலவச செக்யூரிட்டி சர்வீஸ் செய்து கொடுத்திருக்கிறார். இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொண்டதில்லையாம்(Do you hear a alarm going off in your head?)

இவர்களின் கல்யாணக்கதையைப்பற்றி பேசினால் மட்டும், இருவர் முகத்திலும் புன்சிரிப்பு அரும்புவதை பார்த்திருக்கிறேன். அப்பா,அம்மா பின்னால் சுற்றியதை நேரடியாக ஒப்புக்கொள்ளவே மாட்டார். அம்மா எங்களிடம் ஏதாவது கல்யாணக்கதை சொன்னால், "நம்பாதேமா, பாவம் ஏதோ கற்பனையில் மிதக்கிறாள்" என்றெல்லாம் இடையிடையே கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார். எனக்கே ஒரு வேளை அம்மா ரொம்ப கற்பனை பண்ணுகிறாரோ? என்று சந்தேகாமாக கூட இருந்தது, ஒரு நாள் பெரியம்மாவின்(அம்மாவின் அக்கா) பழைய திருமண ஆல்பம் பார்க்கும் வரை.

சில படங்களில் ஓரமாக ஒல்லியான உருவத்துடனும், கட்டம் போட்ட சட்டை, பெல் பாட்டம் பேண்டுடன் அசடு வழிய சுப்ரமணியபுரம் ஹீரோ மாதிரி நிற்பது அப்பாவா? அப்பாவே தான்! அம்மாவின் அக்கா கல்யாணத்துக்கு, தானே வலிய வலிய எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்திருக்கிறார், எல்லாமே அம்மாவுக்காக! அதே புகைப்படங்களில், கொஞ்சம் தள்ளி பட்டுப்பாவாடை தாவணியுடனும், முகம் முழுக்க பெருமிதத்துடனும் தேவதைப்போல அம்மா நிற்கிறார். இருவர் முகத்திலும் எத்தனையோ எதிர்பார்ப்புகள், கனவுகள்! இங்கே யார் எதிர்ப்பார்ப்பை யார் நிறைவேற்றவில்லை, ஏன் இப்படி எல்லாம் ஆக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு இன்னும் புரியவில்லை. புகைப்பட ஆதாரத்துடன் அம்மா மடக்கியவுடன், அப்பாவுக்கு பேச்சே வராது. சிரித்துக்கொண்டே, "உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை" என்று ஏதோ அவசரமான வேலை இருப்பது போல எழுந்து சென்றுவிடுவார்.

பெப்சி உமாவுக்குப்பிறகு வேறொரு பெண்ணும் அப்பாவின் கருத்தைக்கவர்ந்தார், வேறு யாரும் இல்லை, சிம்ரன்! ஒரு நாள் டிவியில் "மனம் விரும்புதே" பாட்டுக்கு சிம்ரன் ஆடுவாரே, அந்தப்பாடல் வந்தது, அப்பா உடனே, “யாருமா இந்த பொண்ணு?” என்று ஆர்வமாக கேட்டுத்தெரிந்துக்கொண்டார். அதற்குப்பிறகு எல்லாம் சிம்ரன் மயம். சிம்ரன் படம் என்றால் அது எத்தனை கேவலமான படமாக இருந்தாலும் குடும்பதோடு கிளம்பிவிடுவார். அம்மாவுக்கு ரொம்ப எரிச்சல் வரும், “இவள் ஒரு அழகா? பல்லிக்கு பாவாடை சட்டை போட்ட மாதிரி” என்று திட்டிக்கொண்டே கிளம்புவார்.

“ஓவர் வெயிட்டாக இருப்பதால் அப்பாவுக்கு பிடிக்காமல் போய்விட்டதோ” என்ற சந்தேகம் அம்மாவுக்கு வந்துவிட, அதற்கு பிறகு இரவு நேரத்தில் சாப்பிடாமல் டயட் பண்ண துவங்கினார். இரண்டு நாள் பேசாமல் இருந்த அப்பா, மூன்றாவது நாள் “ஏன் அம்மா சாப்பிடாமல் இருக்கிறாள்” என்று கேட்க, நான் உடனே “சிம்ரன் மாதிரி இளைக்க டயட் பண்றாங்க” என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் க்ளாசிக்! “உங்க அம்மா தான் எனக்கு சிம்ரன்! அந்தப்பொண்ணு எல்லாம் என்ன அழகு, சும்மா பல்லிக்கு பாவாடை சட்டை போட்டது மாதிரி” என்று அம்மாவின் டயலாக்கை குறும்பாக அவரிடமே திரும்ப சொல்ல, அம்மாவுக்கு ஒரே பூரிப்பு. அதில் இருந்து அம்மாவை கிண்டல் பண்ண “அம்மா” என்று அழைக்காமல், “சிம்ரன்” என்று கூப்பிடுவோம், காலப்போக்கில் அது “சிம்” என்று உருமாறியது. இங்கே கூட பல முறை “சிம்” என்று எழுதி விட்டு பிறகு அம்மா என்று திருத்தி இருக்கிறேன்.

இப்படி ஒரு சில மணி நேரம் இரண்டு பேரும் பழைய ரொமாண்டிக் கனவுகளில் மூழ்குவார்கள், வீடு கொஞ்சம் கலகலப்படையும். ஆனால் அந்த மகிழ்ச்சி எல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது, மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறிவிடும். இந்த உலகத்திலேயே ரொம்ப அசிங்கமான சண்டையாக நான் கருதுவது என்ன தெரியுமா? கணவன் –மனைவியிடையே நடக்கும் பொருளாதாரம் சம்மந்தமான சண்டைகள்! அப்பாவின் வரவு- செலவு கணக்குகளில் அம்மாவுக்கு ரொம்ப சந்தேகம். முக்கியமாக பொங்கல், தீபாவளி போனஸ் சமயங்களில் சண்டை ரொம்ப தீவிரமடையும்.

சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சரியாக கணக்கு காட்டாமல் மறைக்கிறார் என்பது அம்மாவின் ஆதங்கம். “அதென்ன ஆச்சு, இதென்ன ஆச்சு” என்று தொடர்ந்து அப்பாவை நச்சரிப்பார்(எனக்கு அப்போது அது நச்சரிப்பாக தோன்றியது). ஒரிரண்டு முறை பொறுமையாக பதில் சொல்லும் அப்பா, மூன்றாவது முறை பொறுமை இழப்பார். அவருக்கு கோபம் வந்தால் ரொம்ப அதிகமாக கோபம் வரும், அன்பும் அப்படியே. “ஆமாம் எல்லா பணத்தையும் தே---------- கொடுத்துட்டு வந்தேன், என்ன செய்யனுமோ செய்” என்று பதிலுக்கு இவர் கத்த, அப்புறம் ஒரே கூச்சல், சண்டை, அழுகை. இதுவே ஒரு தொடர்கதையாகப்போனது. அப்போது நான் முடிவு செய்தது தான், “அன்புக்குரியவர்களிடம் பணம் காரணமாக என்றுமே சண்டை போட மாட்டேன்” என்பது.

நான் கொஞ்சம் வளர்ந்து, வரவு செலவு கணக்குகள் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டவுடன், ஒரு முறை அப்பா அக்கவுண்டுகளை சரி பார்த்தபோது ஒன்றை கண்டுபிடித்தேன். நிச்சயமாக கணக்கு சரியாக இல்லை. அம்மா எல்லாவற்றுக்கும் அழுது சண்டை போடுவாரே தவிர, என்னை மாதிரி ஆதாரம் எல்லாம் கண்டுபிடிக்கத்தெரியாத அப்பாவி அவர். எல்லாவற்றுக்கும் ஒழுங்காக கணக்கு எழுதி வைக்கும் பழக்கமுடைய அப்பா, சில செலவு கணக்குகளை எழுதாமல் மறந்திருப்பார் என்பதை நான் நம்பவில்லை. ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடந்துக்கொண்டு இருக்கிறது. இதை வெளியே சொல்ல எனக்கு பைத்தியமா? அம்மாவிடம் இன்று வரை இதைப்பற்றி மூச்சுவிட்டதில்லை.

- நினைவுகள் தொடரும்

யாருக்காக எழுதுறீங்க? ஊருக்காகவா? உங்களுக்காகவா?

நமக்கு பேச்சு சுதந்திரம் கிடைத்துவிட்டது!

எழுத்துச்சுதந்திரம் கிடைத்துவிட்டது!

நாமும் ஒரு வலைபூ ஆரம்பித்து எழுதுறோம்.

தமிழ்மணத்தில் இணைந்தாகிவிட்டது!

இனிமேல் நம் இதயத்திலிருந்து வரும் உணவுப்பூர்வமான கருத்துக்களை சொல்ல ஒண்ணும் தெரியாத, அரசியல் செய்யும் மட்டறுத்துனர்களை ஜால்ரா அடிக்க வேண்டியதில்லை! நம்ம கருத்தை நாகரீகமாகச் சொல்ல இன்னொருவர் கால் பிடிக்க வேண்டியதில்லை! இதுவல்லவா எழுத்துச்சுதந்திரம்! இதுவல்லவா சுதந்திரம்!

சரி, பதிவுலகில் நம் கருத்துக்களை சொல்கிறோம், விவாதிக்கிறோம், வாதிடுகிறோம், சில சமயம் உளறுகிறோம்! நேரில்சொல்ல முடியாத, சரியாப்புரியாத விவகாரமான விசயங்களை, கற்பனை கதைகள் மூலம் பல பாத்திரங்கள் மூலமும் சொல்கிறோம். நம் உணர்வுகளை கருத்துக்களை கற்பனைபாத்திரங்களாக வந்து சொல்கிறோம் அல்லது சொல்ல முயற்சிக்கிறோம்.

பிடிக்காத கருத்தைப்பார்த்து நம் எரிச்சலை பின்னூட்டங்களில் காட்டுகிறோம், நல்லவைகளையும் ரசித்ததையும் பாராட்டுகிறோம், சண்டை போடுகிறோம், ஊருக்கு உபதேசம் செய்கிறோம்!
ஒவ்வொரு நேரம் தவறான கருத்தை சரி என்று நினைத்துக்கொண்டு சொல்கிறோம், பிறகு நம்மை சரி செய்து கொள்கிறோம். கற்றுக்கொள்கிறோம்!

வதந்திகளை பரப்புகிறோம், விஞ்ஞானத்தை ஒழுங்காக புகட்ட முயற்சிக்கிறோம், மதத்தை, கடவுளைப் பற்றி பேசுகிறோம்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை, ஒரு நடிகரை தெய்வம்போல பூஜிக்கும் ரசிகர்களை புண்படுத்துகிறோம். பொய் சொல்லுபவர்களை, ஜாதி வெறியர்களை,ஊரை ஏமாற்றும் வேஷதாரிகளை பார்த்து எரிச்சலடைந்து நம் பதிவுகளில் திட்டுகிறோம்.

ஒவ்வொரு நடிகரையும், அரசியல் வாதிகளையும் கேலி செய்வதே தொழிலாகக் கொண்ட விமர்சகர்களை விமர்சிக்கிறோம். கலாச்சாரத்தை சீரழிக்கும் சில அரைவேக்காடுகளை விமர்சிக்கிறோம்!

இதெல்லாம் செய்யும்போது பல எதிரிகளை சம்பாதிக்கிறோம், நம் எழுத்தைபார்த்தாலே -ve மார்க் கொடுக்க ஒரு சிலரை தூண்டுகிறோம். பல எழுத்துழக அரசியல்வாதிகளை பார்க்கிறோம்.

இதெல்லாம் யாருக்காக செய்கிறோம்?

உனக்காகவா இல்லை ஊருக்காகவா, வருண்? என்ற கேள்வி என்னையே நான் கேட்பதுண்டு.

அதற்கு பதில் என்னவருமென்றால், நான் எழுதுவது முதலில் எனக்காகத்தான்! என் மன ஆறுதலுக்கு! என் ஆதங்கத்தை தெரிவிக்க! என் அறியாமையைப் போக்க!

அப்புறம் ஒரு விசயம் இந்தக் "காதல் கதை" எழுதுவது, அதில் உளறுவது மட்டும் என் "அவளுக்காக" ! . நான் என்ன எழுதினாலும் நல்லா இருக்குனுதான் சொல்வாள். என்னை கதை எழுத ஊக்குவித்து என்னை எழுதவைப்பதும், என்னைக் கெடுப்பதும் அவள்தான். நாந்தான் என்னுடைய முதல் ரசிகன் என்றால், இல்லை நான்தான் உங்கள் முதல் என்பாள் "அவள்".

போட்டிக்காக எழுவதில்லை!

பரிசுக்காக எழுதுவதில்லை!

பெருமைக்காக எழுதவில்லை!

பிரபலமாவதற்காக எழுதுவதில்லை!

மன ஆறுதலுக்காகத்தான் பொதுவாக எழுதுகிறோம்! என்று சொன்னால் யார் நம்பப்போகிறார்கள்? யார் நம்பனும்? யார் நம்பினால் என்ன? நம்பாவிட்டால் என்ன?

எதுக்கு இந்த சுயபுராணம்? சும்மாதான்! :)

Sunday, January 4, 2009

அமெரிக்க பொருளாதாரமும் குறையும் பெட்ரோல் விலையும்!

அமெரிக்க பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது உலகமறிந்தது. 65 வயதில் வேலையில் இருந்து ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணியவர்கள் எல்லாம், தான் வைத்திருந்த சேமிப்பில் 40% பணத்தை இழந்து தவிக்கிறார்கள் இன்று. இதில் பலர், 65 வயதுக்கப்புறமும் தொடர்ந்து வேலை செய்வதாக முடிவுக்கு வந்து விட்டார்கள். இது போல் ஒரு சூழ்நிலை உருவாகும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

உலகமே இதையறிந்து அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் கைகொட்டி சிரிக்கிறது. அமெரிக்கா வீழ்வதால் பலருக்கும் மகிழ்ச்சி என்பதை கண்கூடாகப்பார்க்கலாம்.

ஆனால் இந்த அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் உலகப்பொருளாதாரமே பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. எந்திரன் படம் ஐங்கரனிடம் இருந்து சன் பிக்ச்சர்ஸ் க்கு கை மாறியதுகூட அதனால்தான்.

மேலும் நிறைய இந்தியர்கள் (மென்பொருள் சம்மந்தப்பட்ட வேலையில் உள்ளவர்கள்) வேலை இழந்து உள்ளார்கள், இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதனால் இது சந்தோஷப்படும் விசயமா என்று தெரியவில்லை.

இந்த ஒரு பொருளாதார வீழ்ச்சி சூழலில் அமெரிக்காவில் இன்னொரு அதிசயம்! அது என்னவென்றால், பொருளாதாரம் இவ்வளவு மோசமாக இருக்கும்போது,

* மிகக்குறைவாக இருக்கிறது பெட்ரோல் விலை (gasoline) $1.40 / gallon இன்று!!!

* கடந்த 5 வருடத்தில் இவ்வளவு குறைவாக இருந்ததில்லை. 6 மாதங்கள் முன்னால் $ 4.5 / gallon இருந்தது.


இதைப்பற்றி, பொருளாதாரம வீழ்ச்சியில் இருக்கும்போது ஏன் பெட்ரோல்விலை குறைகிறது? என்று கேட்டால், பெட்ரோலுக்கு டிமாண்ட் இல்லாததால் இப்படி என்கிறார்கள். இந்தியா, சீனா, மற்றும் ஐரோப்பாவிலும் பெட்ரோல் விலை குறைந்து உள்ளதா என்று தெரியவில்லை.

Saturday, January 3, 2009

காதலுடன்-6

“சாரிடி, சந்தியா, சொல்லாமல் வந்ததற்கு! சும்மா ஷாப்பிங் வந்தேன். அப்படியே உன் காஃபி குடித்துவிட்டு போகலாம்னு வந்தேன்” என்றாள் ரமேஷ் இருப்பதை உணர்ந்து.

“ஹாய் காவ்யா. ஹவ் ஆர் யு?” என்றான் ரமேஷ்.

“ஓ கே ரமேஷ். நீங்க வந்து இருப்பீங்கனு நினைக்கலை”

“நல்லவேளை வந்தீங்க, காவியா. நான் சந்தியாவிடம் தனியா மாட்டிக்கிட்டு முழிச்சிண்டு இருந்தேன்” என்று சிரித்தான்.

“ஏன் உங்க மேலேயே நம்பிக்கை இல்லையா, ரமேஷ்?” என்றாள் சந்தியா.

“சரி அப்படித்தான் நு வச்சுக்குவோம். இப்போ திருப்தியா?”

“சரிடி, நான் காஃபி போடுறேன். நீ உள்ள கிட்ச்சனுக்கு வர்றியா இல்லை ரமேஷிடம் பேசிக்கொண்டு இருக்கியா?”

“நான், ரமேஷை கொஞ்சம் அறுக்கிறேன். நீ காஃபி போடுடி”

“உங்களுக்கு நியூஜெர்ஸி பிடிக்கலையா, ரமேஷ்?”

“அந்தமாதிரி ஒண்ணும் இல்லை காவியா. I did not like that job. My boss was an idiot there. It is just impossible to get along with him. அதான் காரணம்”

“So you are back to Chicago?”

“Yep, at least I have better professional environment here. How is your life Kavya?”

“என்னுடைய வாழ்க்கையா? Professional life is fine. Personal life sucks!” சிரித்தாள் அவள்.

“என்ன அதுக்குள்ளே இவ்வளவு அலுப்பு, காவ்யா? ஏதோ மிட்-லஃப் க்கு வந்தது போல இப்போவே பேசுறீங்க?”

“ஆமா, அது ஏன் மிட்-லைஃப் ல மட்டும் “க்ரைஸிஸ்” வருதுனு சொல்றாங்க, ரமேஷ்? மற்ற நேரங்களிலெல்லாம் வராத மாதிரி?”

“பொதுவா மிட்-லைஃப் ல ரொம்ப பிரச்சினை, காவியா. இந்த வயதில் ஒருவர் அப்பா-அம்மாவுக்கு வயசாயிரும் அவங்க ஒரு பக்கம் உங்க பிரச்சினைகளை புரிந்துகொள்ளாமல் கொல்லுவாங்க, இன்னொரு பக்கம் உங்க டீனேஜ் பசங்க நீங்க சொல்றதுக்கு எதிரா செய்வாங்க! உங்களுக்கு அறிவே இல்லைனு அடித்துச் சொல்லுவாங்க! இது ரெண்டும் போக, இன்னொரு பக்கம் உங்க மனைவிக்கு உங்க மேலே உள்ள பயம் மரியாதை எல்லாம் போயி நீங்க ஒண்ணுமில்லை னு ஆயிடும். மனைவிக்கும் உங்க மேலே பக்தி மரியாதை எல்லாம் போனவுடன், ஆண்களுக்கு ஒரு “மாதிரியா காம்ப்லெக்ஸ்” வந்திடுமாம். இந்த மனக்குழப்பத்தால் உருவாவதுதான் “மிட்-லைஃப் க்ரைஸிஸ்” என்கிறார்கள். இந்த மும்முனை தாக்குதலால், ஒரு ஆணின் நிலைமை “அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போனதடி” நு ஆயிடும் நு நினைக்கிறேன். இந்த நேரத்தில் மன நிம்மதிக்காக ஏதாவது க்ரேசியா செய்துவிடுவார்கள் நு நினைக்கிறேன்”

“பரவாயில்லை, ஏதோ அனுபவசாலி மாதிரி சொல்றீங்க, ரமேஷ்!”

“சரி, உங்க பிரச்சினைபற்றி ரொம்ப டீட்டெயிலா பேசமுடியாதுனு நினைக்கிறேன். மேலும் உங்களுக்கு அறிவுரை கொடுக்கும் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை” என்றான் ரமேஷ்.

“சந்தியாதான் நிறைய அறிவுரை கொடுக்கிறாள். சிங்கிளா உங்களையெல்லாம் பார்த்தால் பொறாமையா இருக்கு!”

“இக்கரைக்கு அக்கரை பச்சை. நான் வேணா கார்த்திக்ட்ட பேசவா, காவியா?”

சந்தியா, காஃபியுடன் வந்தாள். மூவருக்கும் காஃபி போட்டு கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்துவிட்டு தானும் அமர்ந்தாள்.

“நான்கூட யோசித்தேன். ஆனால் உங்களுக்கு கார்த்திக்கை அவ்வளவு பழக்கம் இல்லை இல்லையா, ரமேஷ்?” என்றாள் சந்தியா.

“உண்மைதான் சந்தியா. மேலும் இது கொஞ்சம் கஷ்டமான விசயம்தான், சந்தியா. நான் என்ன நினைக்கிறேன் என்றால், காவியாவும் கார்த்திக்கும் மனம் திறந்துபேசனும். வேற யாருமே இதில் தேவை இல்லை. If Sandhya or I suggest something to Karthik, it might lead to unnecessary complications. இதைவிட நிலைமை மோசமாக ஆக சாண்ஸிருக்கு”

“I don't know, Ramesh. Even if it gets worse, that is a solution if you ask me” she smiled.

“Well, marital problems are the most complicated ones in the earth. நிறைய கணவன் மனைவிக்குள்ளே இது இருக்கு, வெளியே வருவதில்லை. ஆனல் உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு, காவியா! நீங்க ரொம்ப கவனமாகத்தான் இதை அனுகனும்.

“I think I am going to talk to a Shrink and see whether I could make Karthik to understand”

“Sexual problems are mostly psychological, Kavya. Sorry to ask you this, you think he is in love with someone else?”

“அப்படியெல்லாம் இருக்கிற மாதிரி எனக்கு தோணலை, ரமேஷ்”

“Do you hurt his feelings, make him look stupid or inferior, anything of that sort?”

“இரண்டு பேரும் வேலை பார்க்கிறோம்.அவரை விட நான் கொஞ்சம் அதிகமாகவே சம்பாரிக்கிறேன். ஒருவரை ஒருவர் அப்பப்போ புண்படுத்துவதென்பது சுத்தமாக இல்லைனு என்னால் சொல்லமுடியாது. வி ஹர்ட் ஈச் அதெர் நவ் அண்ட் தென். Why do you ask all these, Ramesh?”

“இல்லை நான் என்ன நினைக்கிறேனென்றால்.. If you hurt him psychologically he cant perform well with you. If you treat him badly in general but want him to perform well in bed it is not going to work. He would try find someone more comfortable, easy. Sexual problems are most often psychological, not physical, Kavya. But these days it is easy to resolve. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா பேசினால்தான் ஒரு நல்ல தீர்வு காணமுடியும். தெரிந்தோ தெரியாமலோ ரெண்டு பேரும்தான் இங்கே பிரச்சினை.ஒருவர் மட்டுமல்ல.ஒருவரை மட்டும் இதில் குறை சொல்வது கடினம்”

“You are making this more complicated now, Ramesh” என்றாள் சந்தியா.

-தொடரும்

பின்குறிப்பு: நிறைய ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் "சென்ஸிடிவ்" டாப்பிக் என்பதால் இதை தமிழில் எழுத கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதான்..

Friday, January 2, 2009

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 9

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
பாகம் 8

எனக்கு வந்த பின்னூட்டங்களில் பலர் டிலோரிஸ் எப்படி இருக்கிறார் என்பதைப்பற்றியும், அப்புறம் என்னுடைய குடும்பம் என்ன ஆனது என்பதைப்பற்றியும் கவலையுடன் விசாரித்திருந்தார்கள், நன்றி :). இதென்ன தேவதைக்கதையா, "And they lived happily ever after" என்று எழுத? In real life, no body lives happily ever after! காலப்போக்கில் சில காயங்கள் ஆறின, அதுமட்டும் உண்மை.

அந்த பயங்கரச்சம்பவம் நடந்த பிறகு அப்பாவை பல நாட்கள் நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை விரைவிலேயே அவரும் புரிந்துக்க்கொண்டார், அதற்குப் பிறகு ஏதோ நடமாடும் பிணம் போல தான் அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாமே இருந்தது, அப்பா மட்டுமல்ல, அம்மாவும் அப்படித்தான் மாறிப்போனார். ஏதோ கடனே என்று இருவரும் வேலைக்கு போனார்கள், ஷாப்பிங் பண்ணினார்கள், சமைத்தார்கள், சாப்பிட்டார்கள். அப்பா வேலையில் இருந்து வந்தவுடன் பழைய மாதிரி நான் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக்கொள்வதில்லை. வீட்டுக்கு வரும்போதே இன்றாவது நானோ அல்லது அம்மாவோ பேசுவோமா? என்ற எதிர்ப்பார்ப்புடன் தான் நுழைவார். அப்படி யாரும் வரவேற்க வராத போது ஒரு நொடி நிமிடம் அவருடைய கண்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை பளிச்சிடும், அதை என்னால் மறக்கவே முடியாது.

வெளியில் வீம்புக்காக கோபமாக நடித்தேனே தவிர, மனதுக்குள் அப்பாவுடன் பேசாமல் இருப்பது எனக்கு கொடுமையாக இருந்தது. பல முறை மறந்துவிட்டு பேசிவிட நினைத்து கடைசி நிமிடத்தில் நினைவு வந்தவளாக நிறுத்தி இருக்கிறேன். இங்கே என்னுடைய பிரச்சினை அம்மா தான், அவர் போல எனக்கு அப்பாவின் தவறு மன்னிக்க முடியாததாக இருக்கவில்லை என்றாலும், அம்மா வேதனையோடு இருப்பதால் அப்பாவிடம் முன்பு போல பேச தயக்கமாக இருந்தது.அம்மாவுக்காக அப்பாவிடம் கோபமாக இருப்பதைத்தவிர, வேறு வழி இல்லாமல் போனது. எப்படியோ கஷ்டப்பட்டு என்னுடைய உறுதியை ஒரு 1 மாதக்காலம் கடைப்பிடித்துக்கொண்டு தான் இருந்தேன், ஒரு சனிக்கிழமை காலை எல்லா உறுதியும் தவிடுப்பொடியானது!

நானும், அப்பாவும் மட்டும் சனிக்கிழமைகளில் ஷாப்பிங் போவது வழக்கமாக இருந்தது. 1 வாரத்துக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்க என்னை மட்டும் தான் அழைத்துப்போவார். சனிக்கிழமை காலை என்றால் அது "அப்பா-மகள்" நேரம். அம்மாவுக்கு தெரியாமல் ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித்தருவார்(சனிக்கிழமை, அம்மா தலைக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார், தலை குளித்துவிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்குமாம்). ஒரு நாலு வாரங்களாக அப்பா தனியாக ஷாப்பிங் போய் வந்தார், அவருக்கு முன்னால் ரெடியாகி வெளியே ஓடும் நான், அவர் கடைக்கு போகும் நேரம் வந்தால் என் ரூமுக்கு போய் கதவை சாத்திக்கொள்வேன். எனக்காக வெகு நேரம் காத்திருந்துவிட்டு, வேறு வழி இல்லாமல் போவார். ஒரு சனிக்கிழமை என் அறைக்கே வந்து கதவைத்தட்டினார்.

கதவைத்திறந்த எனக்கு அப்பாவைப்பார்த்து ஒரு மாதிரியாகிப்போனது. ரொம்ப நாள் கழித்து அன்று தான் அப்பாவை ஏறெடுத்துப்பார்த்தேன். ஷேவ் செய்யப்படாத 2 நாள் தாடியுடன், மேட்ச்சாகாத சட்டை- பேண்ட்டுடனும் ஏதோ உடம்பு சரியில்லாதவர் போல இருந்தார். "இந்த வாரமும் கடைக்கு வரலையா கயல்? தனியாப்போக போர் அடிக்குது" என்று தொண்டைக்கமற அவர் என்னிடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. "2 நிமிஷம் வெயிட் பண்ணுங்க டேடி, ரெடியாகிடறேன்" என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது. அவர் 1 வாரமாக அழுது உருவாக்கிய கோபத்தை ஒரு நிமிடத்தில் உடைத்துவிட்டாரே, என்ற கோபம் அம்மாவுக்கு! சமையலறையில் நாலு பாத்திரத்தை கோபத்துடன் உருட்டினார். நான் அவரைத்திரும்பிக்கூடப்பார்க்காமல்(வேறென்ன, பயம் தான்) அப்பாவை பின் தொடர்ந்தேன். வெளிக்கதவை அடைக்குமுன் அம்மாவின் பார்வை என் முதுகில் சுட்டெரிப்பதை உணர்ந்தேன்.

திரும்ப வீட்டுக்கு வந்தவுடன் அம்மா முறைத்துக்கொள்ள ஆரம்பித்தார். சமாதானப்படுத்தப்போன போது "ஏமாற்றிவிட்டாயே" என்பது போல அழுதார். "உனக்கு கொஞ்சமாவது என் மேல அன்பிருக்காடி? இனிமேல் அந்த மனுஷனை நம்பினாலும் நம்புவேனே தவிர, உன்னைப்போல பச்சோந்தியை நம்பவே மாட்டேன். இந்த ஜென்மத்துக்கும் என்னுடன் பேசாதே!" என்றார். அம்மா திட்டியது வலித்தாலும், என்னை கோபிக்கவாவது 'அப்பாவை நம்புவேன்' என்று அவர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அம்மாவின் நேரத்தில் ஒரு ஜென்மம் = நம் நேரத்தில் ஒரு நாள். என்ன செய்வது, அப்பாவுக்கு கடைக்கு போகும் போது துணைக்கு போக என்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது போல தான் அம்மாவுக்கும்- அவர் கோபத்தையும், வருத்தத்தையும் காண்பிக்க என்னை விட்டால் வேறு யாரும் இருக்கவில்லை.

Thursday, January 1, 2009

ரஜினியின் பாபாஜியின் சிறுநீரகங்கள்!

யாரோ ஒரு பாபாஜீ என்கிற சித்தர், 2000 ஆண்டுகள் வாழ்கிறார் என்கிறார்கள். அதை நம்ம ரசினி நம்புகிறார். சரி, இதை அவர் பர்சனல் மேட்டர்னு விடமுடியாதுதான்.

காரணம்? இது சமீபத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக இருக்கிறது.

இங்கே பாபாஜி 2000 ஆண்டு வாழ்வதுல் உள்ள முக்கியமாக பிரச்சினை ஒன்று சொல்ல வேண்டும்! மனித உடம்பில் உள்ள முக்கிய உறுப்புக்கள் (இதயம், ஈரல், நுரையீரல், மேலும் செக்ஸ் ஹார்மோன்ஸ்,) போன்றவை ஒருவருக்கு வயதாக ஆக, கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்துகொண்டுதான் போகின்றன. மேலும் வயதாக ஆக, ஒரு வருக்கு எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டே போவது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

இதில், சிறு நீரகம் என்பது சந்தேகமே இல்லாமல் வருடத்திற்கு வருடம் பழுதடைந்து கொண்டுதான் போகிறது என்பது அறிவியலில் நிரூபித்த உண்மை.

Unlike any other vital organs, one's Kidney function goes down as one gets older and older no matter how healthy the person is!

அதாவது ஒருவர் 200 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் பிறக்கும்போது இருந்த அவருடன் வந்த 2 சிறுநீரகத்தை வைத்து வாழவேமுடியாது. அவைகள் 200 வருடங்களில் முற்றிலும் பழுதடைந்துவிடும் என்பது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. 200 ஆண்டுகளுக்குள் சிறுநீரகம் பழுதடைந்தால் 2000 ஆண்டுகள் அதே சிறுநீரகத்தை வைத்து வாழ்வது என்பது JUST IMPOSSIBLE!